
தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. இவர் கைவசம் டஜன் கணக்கிலான படங்களுடன் செம்ம பிசியாக நடித்து வருகிறார். தற்போது ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார் யோகிபாபு. இப்படம் வருகிற ஆகஸ்ட் 10-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இதுதவிர பாலிவுட்டில் அட்லீ இயக்கிய ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கான் உடனும் நடித்திருக்கிறார் யோகி. இப்படம் அடுத்த மாதம் ரிலீஸ் ஆக உள்ளது.
யோகிபாபுவின் கால்ஷீட் கிடைக்காமல் பல தயாரிப்பாளர் ஏங்கி வருகின்றனர். சமீபத்தில் தோனி கூட தான் தயாரித்த முதல் படமான எல்.ஜி.எம் படத்திற்காக யோகிபாபுவின் கால்ஷீட் வாங்க படாதபாடு பட்டதாக கூறி இருந்தார். இப்படி நிற்க கூட நேரம் இல்லாமல் சுழன்று கொண்டிருக்கும் யோகிபாபு, தீண்டாமை கொடுமையை எதிர்கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படியுங்கள்... பாடகி சின்மயி மகன்களுடன் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடிகை சமந்தா போட்ட கியூட் டான்ஸ் - வைரலாகும் வீடியோ
யோகிபாபு முருகன் மீது அதீத பக்தி கொண்டவர். இதனால் அடிக்கடி முருகன் கோவிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில், அண்மையில் சிறுவாபுரியில் உள்ள முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றிருந்தார் யோகிபாபு. அப்போது அங்கு வந்திருந்த ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
சாமி தரிசனம் முடிந்து அங்குள்ள அர்ச்சகர் ஒருவரை பார்க்க சென்ற யோகிபாபு, அந்த அர்ச்சகருக்கு கை கொடுக்க கையை நீட்டினார். ஆனால் அந்த அர்ச்சகரோ, யோகிபாபுவுக்கு கை கொடுக்க மறுத்துவிட்டார். இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில், முன்னணி நகைச்சுவை நடிகரே இப்படி ஒரு தீண்டாமை கொடுமையை எதிர்கொண்டு இருக்கிறாரா என அதிர்ச்சியுடன் பார்த்து வருகின்றனர். யோகிபாபுவுக்கு கை கொடுக்க மறுத்த அர்ச்சகரை கமெண்ட்டில் வறுத்தெடுத்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... தாய்லாந்துக்கு இன்ப சுற்றுலா சென்றபோது.. பிரபல நடிகரின் மனைவி மாரடைப்பால் மரணம் - திரையுலகினர் அதிர்ச்சி
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.