பாரதி கண்ட புதுமை பெண் நான்.... விருது வாங்கி நிரூபித்த லட்சுமி ராமகிருஷ்ணன்....!!!

 
Published : Feb 07, 2017, 12:25 PM ISTUpdated : Sep 19, 2018, 01:04 AM IST
பாரதி கண்ட புதுமை பெண் நான்.... விருது வாங்கி நிரூபித்த லட்சுமி ராமகிருஷ்ணன்....!!!

சுருக்கம்

அடிக்கடி ஏதாவது பேசி சர்ச்சையில் சிக்குபவர்களில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனும் ஒருவர். இவர் மனதில் பட்டத்தை தயங்காமல் கூறுவது தான் இந்த சர்ச்சைகளுக்கு காரணம் என்று கூட கூறலாம்.

இவர் நடிகை என்பதையும் தாண்டி, இயக்குனர் , தயாரிப்பாளர், பிரபல தொலைக்காட்சியில் குடும்ப பிரச்சனைகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர் என பல விதத்திலும் தன்னால் முடியும் என சாதித்து காட்டிய பெண்மணி.

இவருடடைய படங்களுக்கு நல்ல வரவேற்புகள் கிடைத்த போதிலும், இவர் தொகுத்து வழங்கி வரும் ஒரு நிகழ்ச்சி பலரது விமர்சனங்களுக்கு ஆளானது, இதனால் ஒரு சில பிரபலங்கள் கூட இவரை கடுமையாக விமர்சித்து வந்தனர்.

மேலும் சிலர் இவருடைய நிகழ்ச்சிகளை ஸ்கூப்பிங் செய்து வெறுப்பேற்றியும் வந்தனர், அனைவர்க்கும் பதிலடி கொடுத்து விட்டு ஒரு கட்டத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன், சமூக வலைதளத்தை விட்டே விலகினார்.

பின் மீண்டும் ஒருமாதம் சென்று வலைத்தளத்தில் அவ்வப்போது தன்னுடைய கருத்துக்களை பதிவுசெய்து வருகிறார் தற்போது அவருக்கு அரசு பதிவு பெற்ற கிராம உதயம் என்ற அமைப்பு பாரதி கண்ட புதுமைப்பெண் என்று விருது வழங்கியும்  7.5 லட்சம் பணமும் கொடுத்து  சிறப்பித்துள்ளது. இந்த மகிழ்ச்சியை அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

2025-ல் சமந்தா வாழ்க்கையை டோட்டலாக மாற்றிய 2 நிகழ்வுகள்... ஒன்னு கல்யாணம், இன்னொன்னு என்ன?
2025-ல் 1000 கோடி வசூலை வாரிசுருட்டிய முதல் படம் எது?... இந்த ஆண்டின் பாக்ஸ் ஆபிஸ் கிங் யார்?