
ஒரு சாதாரண டான்ஸ் மாஸ்டராக திரையுலகில் காலடி எடுத்து வைத்து, பின்னர் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என உச்சம் தொட்ட பிரபலமாக உயர்ந்தவர் பிரபுதேவா. சமீபகாலமாக இவர் நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக தமிழ் திரையுலகில் படு பிசியாக நடித்து வருகிறார்.
தற்போது தமிழில் இவர் கைவசம் யங் மங் சங், ரேக்ளா, பொய்கால் குதிரை, மை டியர் பூதம், என ஏராளமான படங்கள் உள்ளன. இவ்வாறு நடிப்பில் பிசியாக இருந்தாலும், அவ்வப்போது சில படங்களில் டான்ஸ் மாஸ்டராகவும் பணியாற்றி வருகிறார் பிரபுதேவா. குறிப்பாக மாரி 2 படத்துக்காக கடந்த 2018-ம் ஆண்டு இவர் நடனம் அமைத்த ரவுடி பேபி பாடல் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. யூடியூபில் இந்த பாடலுக்கு பில்லியன் கணக்கில் வியூஸ் கிடைத்துள்ளன.
இந்நிலையில், பிரபுதேவா தற்போது ஆயிஷா எனும் மலையாள படத்தில் நடன இயக்குனராக பணியாற்றி உள்ளார். மலையாள திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாரான மஞ்சு வாரியர் தான் இப்படத்தின் ஹீரோயின். மேலும் அவர் பிரபுதேவாவின் தீவிரமான ரசிகையாம். அவ்ருடன் பணியாற்ற வேண்டும் என்கிற தனது நீண்ட நாள் கனவு ‘ஆயிஷா’ படம் மூலம் நிறைவேறி உள்ளதாக மஞ்சு வாரியர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
மேலும் பிரபுதேவாவுடன் நடன பயிற்சி மேற்கொண்டபோது எடுத்த புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் மஞ்சு வாரியர். ஆயிஷா படத்தை ஆமிர் பல்லிக்கல் என்கிற அறிமுக இயக்குனர் இயக்கி வருகிறார். இப்படம் மலையாளம் மற்றும் அரபிக் மொழியில் தயாராகி வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.