
நடிகை குஷ்பு:
'தர்மத்தின் தலைவன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை குஷ்பு. இந்த படத்தை அடுத்து இவர் நடித்த 'வருஷம் 16', 'வெற்றி விழா', என இவர் நடித்த அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் ஆனது.
அதிலும் இவர் நடிப்பில் 1990 ஆம் ஆண்டு மட்டும் அதிக பட்சமாக 9 படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் ரஜினி, கமல் என அப்போதைய முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்தது தான்.
குஷ்புவின் வாழ்க்கை:
நடிகைகளுக்கு பொதுவாக ஆடம்பர வாழ்க்கை, அழகு என அனைத்தும் கிடைத்திருந்தாலும். ஏதோ ஒரு வகையில் அவர்கள் வாழ்க்கையில் சோகம் இருக்கும் என்பது மறுக்க முடியாதது.
அந்த வகையில் தற்போது குஷ்பு 32 வருடங்களாக தன்னுடைய மனதில் பூட்டி வைத்திருந்த சோகம் நிறைந்த குடும்ப ரகசியத்தை வெளியே கூறியுள்ளார்.
சோர்வு இல்லாத குஷ்பு:
எப்போது தன்னுடைய கணவர், மற்றும் இரு மகள்களுடன் சிரித்துக்கொண்டு இருக்கும் குஷ்பு வாழ்கையில் சோகம் உள்ளது என்பதை எளிதில் யாராலும் நம்பிவிட முடியாது. காரணம் திரைப்படம், ப்ரோடக்சன் வேலைகள், அரசியல், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டிருந்தாலும் துளியும் தன்னுடைய முகத்தில் சோர்வை அவர் வெளிப்படுத்தியதே இல்லை என கூறலாம்.
குஷ்பு வாழ்கையில் நேர்ந்த சோகம்:
இந்நிலையில் முதல் முறையாக தன்னுடைய மனதில் ஆராத வடுவாக நிலைத்திருக்கும் அந்த சம்பவத்தை பகிர்துள்ளர் குஷ்பு.
கடந்த 1986 ஆண்டு 12ஆம் தேதி செப்டம்பர் மாதம் குஷ்புவை அவருடைய தந்தை வீட்டை விட்டு வெளியே அனுப்பி, போய் கைநிறைய சம்பாதிக்கும் வழியை பார் என கூறி அனுப்பிவிட்டராம்.
குஷ்பு எடுத்த சபதம்:
வீட்டை விட்டு வெளியேறிய குஷ்பு இனி உங்கள் முகத்தை என் வாழ்நாளில் பார்க்க மாட்டேன் என்று கூறிவிட்டு... தன்னுடைய அம்மா, சகோதரருடன் வீட்டை விட்டு வெளியேறினாராம். மேலும் எப்போதாவது உங்களை நான் சந்திக்க நேர்ந்தால் எனது அம்மா மற்றும் சகோதரருடன் தற்கொலை செய்து கொள்வேன் என்றும் அவர் தந்தையிடம் கூறினாராம்.
அந்த சபதத்தில் இன்று வரை நிலையாகவும் இருந்து வருகிறாராம் குஷ்பு. ஒருபோதும் தன்னுடைய தந்தையை சந்திக்க விரும்பாத குஷ்பு பல ஆண்டுகளாக மனதில் வைத்திருந்த குடும்ப ரகசியத்தை தற்போது வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.