விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் எப்படி பட்டவர்? மனம் திறந்த நடிகை மீனாட்சி..!

 
Published : Jan 24, 2018, 01:25 PM ISTUpdated : Sep 19, 2018, 01:52 AM IST
விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் எப்படி பட்டவர்? மனம் திறந்த நடிகை மீனாட்சி..!

சுருக்கம்

madura veeran actress meenatchi talk about vijayakanth son shanmugapandiyan

மதுரவீரன் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் நடிகை மீனாட்சி, முதல் படத்திலேயே பிரபல நடிகரும், அரசியல் தலைவருமான கேப்டன் விஜயகாந்தின் இளையமகன் சண்முகபாண்டியனுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தில் சண்முகபாண்டியனுடன் நடித்த அனுபவம் குறித்து செய்தியாளர்களிடம் பகிர்துள்ளர் மீனாட்சி.

சிறப்பான அனுபவம்:

நடிப்பை பற்றி பெரிதாக புரிதல் இல்லாத குடும்ப பின்னணியில் இருந்து வந்தவள் நான். இருப்பினும், என்னை மதுரவீரன் திரைப்படத்தின் கதாநாயகியாக தேர்தெடுத்தார் இயக்குனர் P.G. முத்தையா. இயக்குனர் P.G. முத்தையா படபிடிப்பில் எனக்கு பெரிதும் உதவினார். அவர் மிகவும் நல்ல மனிதர். எப்போதும் முகத்தில் புன்னகையுடன் இருப்பார். படபிடிப்பு தளத்துக்கு வரக்கூடிய முதல் நபரும் அவர் தான். அவருடைய உண்மையான உழைப்பும் , அமைதியும் அனைவருக்கும் புத்துணர்ச்சியை தரும். அவர் படத்தின் ஒளிப்பதிவாளரா அல்லது இயக்குநரா ? என்ற சந்தேகம் எனக்கு பலமுறை வந்துள்ளது. பன்முக திறமை கொண்ட அவரோடு இப்படத்தில் பணியாற்றியது சிறப்பாக இருந்தது.

சண்முகபாண்டியன் எப்படி?

சண்முகபாண்டியன் மிகவும் எளிமையானவர் , மிகப்பெரிய குடும்பத்திலிருந்து வந்தாலும் எப்போதும் எல்லோரிடமும் சாதரணமாக பழகுபவர். அவர் மிகவும் நேர்மையானவர். படப்பிடிப்பில் வசனங்களை சரியாக பேச எனக்கு உதவியவர் அவர் தான். முதல் படமே அவருடன் நடித்தது மிகவும் பெருமையாக உள்ளது. 

மறக்க முடியாத தருணம்:

என்னுடைய வாழ்கையில் மிகசிறந்த தருணம், மறக்க முடியாத தருணம் என்றால் அது விஜயகாந்த் அவர்களும் பிரேமலதா அவர்களும் படபிடிப்பு தளத்துக்கு வந்து என்னுடன் 1 மணி நேரம் பேசியது தான். என்னுடைய வாழ்வில் எப்போதும் அதை மறக்க முடியாது என்று கூறியுள்ளார் மீனாட்சி.

மீனாட்சியின் பற்றிய தகவல்:

என்னுடைய சொந்த ஊர் ஆலப்புழா , நான் பிறந்தது கேரளாவாக இருந்தாலும்... இந்த படத்தின் படபிடிப்புகள் முழுவதும் தமிழகத்தின் பசுமையான கிராமங்களில் எடுக்கப்பட்டதால் என்னை அழகாக்கி , நிறைய கற்று தந்துள்ளது.

அதிலும் முக்கியமாக கிராமத்து பெண்கள் சேலை அணிவதில் ஆரம்பித்து பலவற்றை எனக்கு கற்றுதந்துள்ளனர். கிராமத்து பெண்கள் சேலை அணிவது எனக்கு மிகவும் பிடிக்கும். மதுரவீரன் படத்தின் படபிடிப்பில் அவர்கள் எனக்கு மிகவும் உதவியாக இருந்தனர். நான் தமிழகத்தின் சிறப்பான தித்திக்கும் பொங்கலுக்கு மிகப்பெரிய ரசிகை. ஆனால் படபிடிப்பின் போது அதை நான் அதிகம் சாப்பிடவில்லை என்று கலகலப்பாக கூறியுள்ளார் மதுரவீரன் படத்தின் நாயகி மீனாட்சி.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி