#Kurup வானளாவிய கட்டிடத்தில் காட்சிப்படுத்தப்பட்ட முதல் மலையாள படம் Kurup ; வைரலாகும் வீடியோ உள்ளே !!!

Kanmani P   | Asianet News
Published : Nov 14, 2021, 02:35 PM ISTUpdated : Nov 14, 2021, 02:45 PM IST
#Kurup வானளாவிய கட்டிடத்தில் காட்சிப்படுத்தப்பட்ட முதல் மலையாள படம் Kurup ; வைரலாகும் வீடியோ உள்ளே !!!

சுருக்கம்

துபாயில் உள்ள உயரமான கட்டிடமான  Burj Khalifa வில் துல்கர் சல்மானின் Kurup படத்தின் ட்ரெயிலர் காட்சிப்படுத்தப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது. 

ஶ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள படம் ‘Kurup’. தேடப்படும் குற்றவாளியான சுகுமார்  குருப்பை மையமாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஷோபிதா துலிபலா, இந்திரஜித் சுகுமாரன், ஷைன் டாம் சாக்கோ, ஷன்னி வேய்ன், டொவினோ தாமஸ், ஷிவஜித், பத்மனாபன், சுதீஷ், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலரும்  நடித்துள்ளனர். துல்கர் சல்மானின் வேஃபேரர் பிலிம்ஸ் மற்றும் எம் ஸ்டார் எண்டெர்டெய்ன்மெண்ட் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன.

இது குறித்து பதிவிட்டிருந்த துல்கர் சல்மான்;  தனது மிகவும் கடினமான திட்டங்களில் ஒன்று குருப், இந்த படத்திற்காக நானும்  முழு பட குழுவும் கடினமாக உழைத்துள்ளோம், "குருப் திரைப்படம் கிட்டத்தட்ட எனது இரண்டாவது குழந்தையாக உணர்வதாக நெருங்கிய குடும்பத்தினரிடமும் நண்பர்களிடமும் நான் பலமுறை கூறியுள்ளேன். இது ஒரு உயிரையும் விதியையும் தன்னகத்தே கொண்ட உயிருள்ள சுவாசமாக உணர்கிறேன்." "இந்தப் படம் சிறந்த பதிப்பாக வருவதற்கு நான்  செய்யாதது எதுவுமில்லை. உடலளவிலும் மனதளவிலும் நான் எல்லாவற்றையும் கொடுத்துள்ளேன். நான் நிறைய 'நான்' என்று கூறியுள்ளேன் என்று எனக்குத் தெரியும். அதை எடுத்துக்கொள்வதற்காக அல்ல. அதை உருவாக்கியதில்  குழுவினரின் அளப்பரிய முயற்சி மற்றும் திறமையம் உள்ளது. ஆனால் இந்தப் படத்துடனான எனது சிறப்பான உறவைப் பற்றி நான் இதயத்திலிருந்து பேச விரும்புகிறேன்" என்று துல்கர் சல்மான் கூறியிருந்தார்.

பல தாமதங்களுக்குப் பிறகு, படம் கடந்த  நவம்பர் 12 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கிரைம் ஸ்டோரியாக இதன் ப்ரோமஷனுக்காக பிரமாண்ட ஏற்பாடுகளை படக்குழு செய்திருந்தது. அதன்படி இந்த படத்தின் ட்ரெயிலர் கடந்த நவம்பர் 10 ஆம் தேதி துபாயில் உள்ள  Burj Khalifa -வில் காட்சிப்படுத்தப்பட்டது. இதன்  மூலம்  உலகின் மிக உயரமான வானளாவிய கட்டிடத்தில் இடம்பெறும் முதல் மலையாளப் படம் என்ற பெருமையை இப்படம் தட்டி சென்றுள்ளது. இந்த காட்சியை facebook லைவ் மூலம் பல லட்சம் ரசிகர்கள் கண்டு கழித்துள்ளனர்.

இந்த செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துல்கர் சல்மான் பகிர்ந்திருந்தார். இந்த பதிவிற்கு பூஜா பட் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் உட்பட பல நட்சத்திரங்கள் துல்கர் சல்மான் ஒரு புதிய மைல்கல்லை எட்டியதற்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். துபாயில் காட்சிப்படுத்தப்பட்ட குரூப்  ட்ரைய்லரை காண படக்குழுவினருடன் துல்கர் சல்மான் தனது மனைவி அமல் சுஃபியா மற்றும் குழந்தையுடன் நேரில் சென்று ரசித்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஐட்டம் டான்ஸுக்காகவே ஆட்டநாயகியை தேடிப் பிடிக்கும் நெல்சன்: ஜெயிலர் 2, ரஜினி ஃபீலிங்க்ஸ் நிறைவேறுமா?
சாப்பாட்டுக்காகவே போகிறோம்; கல்யாண வீட்டில் ஏன் கரண் ஜோஹர் சாப்பிடுவதில்லை? காரணம் என்ன?