தெலுங்கில் ரீமேக் செய்யப்படும் "குரங்கு பொம்மை"

 
Published : Sep 26, 2017, 06:37 PM ISTUpdated : Sep 19, 2018, 01:13 AM IST
தெலுங்கில் ரீமேக் செய்யப்படும் "குரங்கு பொம்மை"

சுருக்கம்

kurangu bombai Telugu remake

சினிமா ரசிகர்களாலும் விமர்சகர்களாலும்  ரசிக்கப்பட்ட ஒரு தரமான வெற்றிப் படம்  மற்ற மொழிகளிலும் படமாக்கப்படுவது இயல்பே. தமிழ் சினிமா ரசிகர்களால் இயக்குனர் நித்திலனின் வித்யாசமான  கதைக்காகவும் அதன் மிக சுவாரஸ்யமான திரைக்கதைக்காகவும்  கொண்டாடப்பட்ட 'குரங்கு பொம்மை' படத்தின் தெலுங்கு உரிமத்தை 'S Focuss' நிறுவனம் பெற்றுள்ளது.

தரமான, சுவாரஸ்யமான படங்களை மக்களுக்குத் தருவதில் எப்பொழுதுமே முனைப்போடு இருக்கும் 'S Focuss' தயாரிப்பு நிறுவனம் 'குரங்கு பொம்மை' படத்தை தெலுங்கில் படமாக்கவுள்ளது. 

'குரங்கு பொம்மை' படக் கதை எல்லைகளையும்  மொழிகளையும்  தாண்டி ரசிக்கப்படும் என்பதற்கு இது ஒரு பெரிய சான்று.

''திறமையான கலைஞர்களுக்கும்  தரமான படங்களுக்கும் ஆதரவு தருவதே எங்களது நோக்கம். இயக்குனர் நித்திலன் ஒரு பெரும் திறன் கொண்ட படைப்பாளி. 'குரங்கு பொம்மை' படம் ஒரு அற்புத படைப்பு. நல்ல படங்களுக்கு மொழி எல்லைகளே கிடையாது. தெலுங்கு சினிமா ரசிகர்களும் தெலுங்கு சினிமா வணிகமும் இப்படத்திற்கு பெரும் ஆதரவு தருவார்கள் என நம்புகிறேன்'' எனக்கூறினார் 'S Focuss' உரிமையாளர் M சரவணன்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கார் விபத்து: நடுரோட்டில் பஞ்சாயத்தை முடித்து வைத்த சிவகார்த்திகேயன்! ரியல் லைஃப் 'அமரன்' என பாராட்டும் ரசிகர்கள்!
கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்