அதிகரிக்கப்பட்ட தியேட்டர்கள்: கலக்கும் "களவு தொழிற்சாலை"!

 
Published : Sep 26, 2017, 05:46 PM ISTUpdated : Sep 19, 2018, 01:13 AM IST
அதிகரிக்கப்பட்ட தியேட்டர்கள்: கலக்கும் "களவு தொழிற்சாலை"!

சுருக்கம்

increase theaters in kalavu thozhilchaalai

சமீபத்தில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம், “களவு தொழிற்சாலை”, சர்வதேச சிலைக் கடத்தல் எப்படி நடைபெறுகிறது என்ற மர்மத்தை  முதல் முறையாக தமிழ்த் திரையில் பதிவு செய்துள்ளது இந்தத் திரைப்படம்.

ஆர்ப்பாட்டமில்லாத எளிமையான விளம்பரங்களுடன் வெளியான இந்தத் திரைப்படம், யாரும் எதிர்பாராத விதமாக ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வெளியான மூன்றாவது நாளிலேயே, இருபதுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. மேலும் வருகிற 29 வெள்ளி முதல் புதியதாக அறுபது திரையரங்கங்களிலும் வெளியாகவுள்ளது.

படத்தைப் பார்த்த பத்திரிக்கையாளர்களும், ரசிகர்களும் படத்தின் இரண்டாம் பகுதியும் சற்று விறுவிறுப்பாக இருந்து இருந்தால் மிகச்சிறந்த படமாக அமைந்திருக்கும் என்று கூறி இருக்கிறார்கள்.

இதை உடனடியாக பரிசீலித்த படக்குழுவினர் இரண்டாம் பகுதியில் பதினைந்து நிமிட காட்சிகளைக் குறைத்து இருக்கிறார்கள், இந்த மாற்றம் இனி படம் பார்க்க வரும் ரசிகர்களை நூறு சதவீதம் திருப்திப்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

லட்சங்களில் சம்பளம் வாங்கிய டான்சர் குயீன் ரம்யா, அழகு ராணி வியானா: ஒரு நாளைக்கு எத்தனை லட்சம்?
அடுத்தடுத்து நடையை கட்டிய போட்டியாளர்கள்: இந்த வாரத்தில் டபுள் எவிக்‌ஷன்: பிக் பாஸின் அதிரடி ட்விஸ்ட்!