"குலசாமி" பட பிரச்சனை... பொய்யை திரும்ப திரும்ப சொல்வதால் உண்மையாகிவிடாது! தயாரிப்பாளர் பதிலடி..!

Published : Mar 31, 2021, 11:41 AM IST
"குலசாமி" பட பிரச்சனை...  பொய்யை திரும்ப திரும்ப சொல்வதால் உண்மையாகிவிடாது! தயாரிப்பாளர் பதிலடி..!

சுருக்கம்

ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்லி கொண்டிருப்பதாலேயே அந்த பொய் ஒரு போதும் உண்மையாகி விடாது. என நடிகர் குட்டிப்புலி சரவணசக்திக்கு தயாரிப்பாளர் சிங்காரவேலன் பதிலடி கொடுள்ளார்.  

ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்லி கொண்டிருப்பதாலேயே அந்த பொய் ஒரு போதும் உண்மையாகி விடாது. என நடிகர் குட்டிப்புலி சரவணசக்திக்கு தயாரிப்பாளர் சிங்காரவேலன் பதிலடி கொடுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள தகவலில், " குலசாமி "  படத்தின் கதையை எத்தனை முறை அவருடையது என்று சொன்னாலும் அந்த கதையை அவருடையது தான் என்பதை அவரால் ஒரு போதும் நிரூபிக்க முடியாது. ஆறு மாதங்களுக்கு முன்பே மத்திய அரசின் காப்பிரைட் உரிமைகள் பதிவு செய்யும் இடத்தில் என்னுடைய கதை பதிவு செய்யப்பட்டுள்ளது.  

அவர்  மீது விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் நான் கொடுத்த புகார் மனுவின் மீது நடந்த விசாரணைக்கு  விளக்கம் அளிப்பதற்கு பதிலாக என் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை செய்தியாளர்கள்  சந்திப்பில்  அள்ளி வீசியிருந்தார். அதற்காக நான் ஒரு விளக்கமும் கொடுத்தேன். அந்த விளக்கத்திற்கு விளக்கமாக " நேரடி விவாதத்திற்கு தயாரா..? என்னிடம் ஆதாரங்கள் இருக்கின்றன "  என்று ஒரு சவால் விட்டிருக்கிறார்... இவரிடமெல்லாம் விவாதம் நடத்தி என்னுடைய நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை.   இந்த படத்தின் தலைப்பும், கதையும் எனக்கே சொந்தம் என்பதை என்னுடைய வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விவாதம் செய்து  வென்று காட்டுவார். 

சரவணசக்தி அவர்களிடம் ஆதாரங்கள் இருப்பின் அவருடைய வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தில் அவர் விவாதத்தை நடத்தி கொள்ளலாம். தனி மனித தாக்குதலுக்கு இடமளிக்கக்கூடாது என்பதற்காக இது போன்ற நேரடி விவாதங்களில் பங்கு பெறுவதில் எனக்கு விருப்பமில்லை என்பதை நண்பர் சரவணசக்தி அவர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன். நீதி ஒரு போதும் சாகாது..நீதிமன்றத்தில் உரிய வழக்கை தொடர்ந்து " எங்க குலசாமி " படத்தின் கதை, அந்த தலைப்பு இரண்டும் எனது நிறுவனத்திற்கே சொந்தம் என்பதை ஆதாரத்துடன் நிரூபித்து வழக்கில் வெற்றி பெற்று காட்டுவேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரஜினி ஒரு வருடம் காத்திருக்க தயாராக இருந்தும்... நீலாம்பரி கேரக்டர் வேண்டவே வேண்டாம் என தூக்கியெறிந்த நடிகை..!
அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் சேர்ந்த ஆரோக்கியம்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!