
படத்தின் ரிவ்யூக்கள் தற்போது வெளிவர துவங்கி உள்ளது. இன்னும் நான்கு நாட்களுக்கு எல்லா காட்சிகளும் இப்போதே புக் ஆகிவிட்டது குறிப்பிடத்தக்கது.
தொடக்கத்தில் இந்த படத்தின் அதிகாலை சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
அதிக தொகையில் கட்டணம் வசூலிப்பதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக அரசு இந்த படத்தின் அதிகாலை காட்சிக்கு அனுமதி வழங்கவில்லை. ஆனால் நேற்று திடீர் என்று சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு மூலம் அனுமதி வழங்கப்பட்டது.
இதையடுத்து இன்று அதிகாலை 4 - 5 மணிக்கு அதிகாலை காட்சிகள் பல திரையரங்குகளில் வெளியானது. இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் பிகில் திரைப்படம் வெளியிட தாமதமானதால் விஜய் ரசிகர்கள் கோபம் அடைந்து கலவரத்தில் ஈடுபட்டனர்.
விஜய் ரசிகர்களின் அட்டகாசத்தால் ஐந்து ரோடு ரவுண்டானாவில் வைக்கப்பட்டிருந்த சிக்னல்கள் கண்காணிப்பு கேமராக்கள் போலீசாரின் ஒலிபெருக்கிகள், தீபாவளியை முன்னிட்டு போலீசார் அமைத்திருந்த கட்டைகளால் ஆனா உயர மேடை ஆகியவை முற்றிலுமாக சேதம் அடைந்தது .
ரவுண்டானாவில் நகராட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டி உடைத்து நொறுக்கப்பட்டது .பல்வேறு கடைகளின் பேனர்கள் கிழித்து எறியப்பட்டன .தீ வைத்து எரிக்கப்பட்டன .
சாலையோர வியாபாரிகள் பிழைப்புக்காக வைத்திருந்த பானைகள் மற்றும் பொருட்களை உடைத்து சேதப்படுத்தினார்கள் . இதையடுத்து அதிவிரைவு படை போலீசார் அங்கு வந்து விஜய் ரசிகர்களை தடியடி நடத்திக் கலைத்தனர் . இந்த சம்பவம் தொடர்பாக 37 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.