
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பாலா. படிப்பில் படு கெட்டி என்றாலும், சினிமா மீது உள்ள ஆர்வத்தால் தொலைக்காட்சியில் கால் பதித்தார். KPY நிகழ்ச்சியில் விதவிதமான கெட்டப்பில் தோன்றி பல ரசிகர்களை சிரிக்க வைத்த பாலா... இதை தொடர்ந்து, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று செய்த அட்ராசிட்டி கொஞ்சம் நஞ்சம் இல்லை. குக் வித் கோமாளி செட்டில் ஒருவரை பார்த்தாலே அவருக்கு காமெடியாக பெயர் வைப்பதிலும், டைமிங் காமெடி செய்வதிலும் வல்லவர் பாலா.
'புஷ்பா 2' ரிலீஸ் எப்போது? சமூக வலைத்தளத்தில் தீயாக பரவும் தகவல்!
காமெடியால் மட்டும் ஒருவரை சிரிக்க வைக்காமல், தன்னால் முடிந்தவரை பலருக்கு உதவிகள் செய்து, அவர்களை சிரிக்க வைக்கும் நல்ல மனம் கொண்டவர் பாலா. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவர் வென்ற குளிர் சாதனை பெட்டியை கூட, ஒரு ஆதாரவற்றோர் இல்லத்திற்கு தான் வழங்கினார். அதே போல் இவரின் பிறந்தநாளை முன்னிட்டு சமீபத்தில் முதியோர் இல்லத்திற்கு ஆம்புலன்ஸ் ஒன்றையும் வாங்கி கொடுத்தார்.
ஒரே வாரத்தில் 1.2 மில்லியன் பார்வைகளைக் கடந்து... உலகளவில் சாதனை படைத்த மாமன்னன் !!
தன்னுடைய தேவைக்கு அதிகமான பணத்தை சேர்த்து வைப்பதை விட அடுத்தவர்களுக்கு உதவி செய்வதற்காக பயன்படுத்த வேண்டும் என்பதையே கொள்கையாக வைத்திருக்கும் பாலாவின், தங்கமான மனசுக்கு தான் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைப்பது மட்டும் இன்றி, விஜய் டிவி-யில் தொகுப்பாளராக கலக்கும் வாய்ப்பும் கிடைத்தது.
இந்நிலையில் பாலா, தன்னுடைய பெற்றோரான... ஜெகநாதன் - பூங்குழலி தம்பதிக்கு மிகவும் பிரமாண்டமாக மணி விழா செய்து அழகு பார்த்துள்ளார். இதுகுறித்த வீடியோ ஒன்றையும் பாலா தற்போது சமூக வளைத்ததில் வெளியிட, ரசிகர்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை பாலாவின் பெற்றோருக்கு தெரிவித்து வருகிறார்கள். பாலா குக் வித் கோமாளி 3 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட நிலையில், நான்காவது சீசனில், படப்பிடிப்புகளில் பிசியாக இருந்ததால் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.