
தமிழ் சினிமாவில் பல காமெடி நடிகர்கள் இருந்தாலும் காமெடி நடிகைகள் ஒரு சிலர் மட்டுமே உள்ளனர். அவர்களில் ஒருவர் நடிகை கோவை சரளா. இவரின் காமெடி நடிப்புக்கு பல ரசிகர்கள் உள்ளனர்.
80 பதுகளில் இருந்து, தற்போது வரை பல பிரபலங்களுடன் இணைந்து நடித்து தன்னுடைய ஈடுஇணையில்லா காமெடி மூலம் ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறார். குறிப்பாக காஞ்சனா, படத்தின் மூன்று பாகங்களிலும் இவருடைய காமெடி காட்சிக்கு பல குழந்தைகள் ரசிகர்களாக மாறிவிட்டனர் என்றே கூறலாம்.
இந்நிலையில் இவர் தற்போது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'அருந்ததி' என்கிற சீரியலில் அக்கினி சாமியாராக என்ட்ரி கொடுத்துள்ளார். இதில் இவருடைய தோற்றம் சற்று வித்தியாசமாக உள்ளது. சால்ட் அன்ட் பெப்பர் கலரில் பாப் கட் தலை, மண்டையின் உச்சியில் ஒரு கொண்டை, காது, கழுத்து, இடுப்பு என அனைத்து பாகங்களிலும், எலும்பு கூடு, மற்றும் சோழிகளால் ஆன அணிகலன்கள் என விசித்திரமாக காட்சியளிக்கிறார்.
மேலும் மஞ்சள் நிறத்தில் ஒரு டாப், மற்றும் மஞ்சள் நிற பேண்ட் அணிந்து பார்க்கவே இவர் கோவை சரளா தான என தோன்றும் அளவிற்கு உள்ளது இவருடைய தோற்றம். இந்த சீரியலில் ஆட்டோ ஓட்டுவது போல், பேய்யை ஓட்டுவது, தனக்கு தானே பேய் ஓட்ட எனக்கு மட்டும் தெரியுமா என்ன என பேசிக்கொள்வது. இவர் ஒரு போலி சாமியார் வேடத்தில் 'அருந்ததி' சீரியலில் நடிப்பதை உறுதி செய்கிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.