பெரியார் பேச்சுக்கு மன்னிப்பு கேட்காவிட்டால்... ரஜினிக்கு மிரட்டல் விடுத்த கோவை ராமகிருஷ்ணன்....!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jan 20, 2020, 12:02 PM ISTUpdated : Jan 20, 2020, 12:09 PM IST
பெரியார் பேச்சுக்கு மன்னிப்பு கேட்காவிட்டால்... ரஜினிக்கு மிரட்டல் விடுத்த கோவை ராமகிருஷ்ணன்....!

சுருக்கம்

நடிகர் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்காவிட்டால் வருகின்ற 23ம் தேதி காலை 10 மணிக்கு அவரது வீட்டை முற்றுகையிடுவோம் என தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கோவை ராமகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

துக்ளக் பத்திரிகையின் 50ம் ஆண்டு விழா சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் கடந்த 14ம் தேதி நடைபெற்றது. அந்த விழாவில் பங்கேற்று பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், முரசொலி வைத்திருந்தால் திமுகவினர், துக்ளக் பத்திரிகை வைத்திருந்தால் அவர்கள் அறிவாளிகள் என ரஜினி பேசியது திமுகவினர் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ரஜினியின் இந்த பேச்சை விமர்சிக்கும் விதமாக விதவிதமான மீம்ஸ்கள் சோசியல் மீடியாவில் வைரலாகின. 

மேலும் சேலத்தில் பெரியார் தலைமையில் நடைபெற்ற மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணியில் ராமர் - சீதையின் ஆடையில்லா படங்கள் செருப்பு மாலையுடன் இடம் பெற்றதாகவும், அதை துக்ளக் பத்திரிகை மட்டுமே தைரியமாக வெளியிட்டதாகவும் கூறினார். 

இதையும் படிங்க: ஹீரோக்களுக்கு நிகராக ஆக்‌ஷன் குயின்களாக மாறும் ஹீரோயின்கள்... அதிரடி சண்டை காட்சிகளில் சும்மா தெறிக்கவிடுறாங்களாம்...!

இந்த தகவல் முற்றிலும் தவறானது என ரஜினிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், கண்டனங்களும்  வலுத்து வருகிறது. மேலும் ரஜினியின் இந்த பேச்சு அமைதியை சீர்குலைக்கும் விதமாக இருப்பதாக கூறி திராவிடர் விடுதலை கழகம் சார்பில் ரஜினி மீது காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோல ரஜினிக்கு எதிராக சென்னை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரை வாங்கி வைக்காமல் உடனே வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: "சப்பாக்" புரோமோஷனுக்காக அதிரடி ஸ்ட்ரிங் ஆபரேஷனில் குதித்த தீபிகா படுகோனே... ஆசிட் விற்பனை குறித்து வெளியிட்ட அதிர்ச்சி தகவல்...!

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்காவிட்டால் வருகின்ற 23ம் தேதி காலை 10 மணிக்கு அவரது வீட்டை முற்றுகையிடுவோம் என தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கோவை ராமகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Demonte Colony 3: பாக்ஸ் ஆபிஸை அதிரவைக்கும் அருள்நிதி! 50 கோடியில் சாதனை படைத்த டிமாண்டி காலனி 3!
Vijay Movie: எந்த தடையும் போடமுடியாது.! விஜய் படம் பொங்கலுக்கு ரிலீஸ்.! தெறிக்கவிடப்போகும் தளபதி ரசிகர்கள்.!