கொம்பு வச்ச சிங்கத்துக்கு 'பிங்க்' கலர் டிரஸ்!

Published : Nov 12, 2018, 06:54 PM IST
கொம்பு வச்ச சிங்கத்துக்கு 'பிங்க்' கலர் டிரஸ்!

சுருக்கம்

குற்றம்-23’ மற்றும் ‘தடம்’ படங்களை தயாரித்த இந்தர்குமாரின் ‘REDHAN’ நிறுவனத்தின் மூன்றாவது படமாக தயாராகிறது ‘கொம்புவச்ச சிங்கம்டா’

குற்றம்-23’ மற்றும் ‘தடம்’ படங்களை தயாரித்த இந்தர்குமாரின் ‘REDHAN’ நிறுவனத்தின் மூன்றாவது படமாக தயாராகிறது ‘கொம்புவச்ச சிங்கம்டா’

சசிகுமாரை நாயகனாக நடிக்கும் இந்த படத்தை  ‘சுந்தரபாண்டியன்’ 
 படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக எஸ்.ஆர். பிரபாகரன் ‘கொம்புவச்ச சிங்கம்டா’ படத்தை இயக்குகிறார்.

1990-1994 காலகட்டங்களில் தமிழகத்தின் ஒரு சிறு நகரத்தில் நடந்த பரபரப்பான உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் நாயகன் நாயகியாக சசிகுமார், மடோனா  செபாஸ்டியன் நடிக்க, முக்கிய கதாப்பாத்திரங்களில் கலையரசன், சூரி, யோகிபாபு, இயக்குனர் மகேந்திரன், ஹரீஷ்ஃபெராடி, ‘சுந்தரபாண்டியன்’ துளசி, ஸ்ரீ பிரியங்கா, தீபா ராமனுஜம் மற்றும் தயாரிப்பாளர் இந்தர்குமார் ஆகியோர் நடிக்கின்றனர். 

இந்நிலையில் இந்த படத்தின் பூஜை இன்று காரைக்குடியில் ‘இயக்குனர் சமுத்திரகனி கிளாப் அடித்து துவக்கிவைத்தார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக இடைவிடாமல் பொள்ளாச்சி, பழனி, தென்காசி, கோவில்பட்டி, விருதுநகர் பகுதிகளில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 

மேலும் இன்று நடந்த பூஜையில் படக்குழுவினர் அனைவரும் 'பிங்க்' கலர் உடையில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஷாருக்கானுக்கு இப்படி ஒரு விசித்திரமான பழக்கம் இருக்கிறதா? இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே..!
2025-ல் பாக்ஸ் ஆபிஸ் குயின் யார்? அதிக வசூலை வாரிசுருட்டிய டாப் 5 ஹீரோயின்ஸ் இதோ