
பிரபல இயக்குனர் வசந்த் மற்றும் எஸ்.ஜே சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த நடிகரும் இயக்குனருமான மாரிமுத்து அவர்கள், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் பயணித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக வெள்ளித்தறையில் பல குணச்சித்திர கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வந்த மாரிமுத்துவிற்கு கிடைத்த மாபெரும் திருப்புமுனை தான் எதிர்நீச்சல் நாடகம்.
இந்த நாடகத்தில் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தாலும், தன் சக நடிகர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக எதிர்நீச்சல் நாடகம் மூலமாக அவருக்கு பல்வேறு பட வாய்ப்புகளும் கிடைத்தது.
மனப்பாக்கத்தில் தனது கனவு வீட்டை கட்டி முடித்துள்ள நடிகர் மாரிமுத்து, அதில் சென்று தனது வெற்றி வாழ்க்கையை துவங்குவதற்கு முன்பாகவே அவர் இறந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எதிர்நீச்சல் நாடகத்தில் அவருடன் பணியாற்றிய நடிகை நடிகர்கள் அவருடைய இறந்த உடலைக் கண்டு கதறி அழுத காட்சிகள் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் பிரபல நடிகர் சூர்யா அவர்கள் மாரிமுத்து குறித்து சில தகவல்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்ட தகவலில் "எனது முதல் திரைப்படமான நேருக்கு நேர் திரைப்படத்தில் எனக்கு உதவிய சில உதவி இயக்குனர்களில் மிகச்சிறந்தவர் மாரிமுத்து, அவருடைய இயல்பான அன்பான குணம் அனைவரையும் வெகு விரைவில் கவரும் வண்ணம் இருக்கும், அவரை தான் இனி மிகவும் மிஸ் செய்ய போவதாகவும், அவருடைய குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கல்களையும்" தெரிவித்துள்ளார் நடிகர் சூர்யா.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.