
சின்னத்திரையில் பல சிறு சிறு கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க துவங்கி, அதன்பிறகு "லொள்ளு சபா" என்கின்ற நிகழ்ச்சியின் மூலம் மக்களின் வயிறுகளை சிரிக்கவைத்தே புண்ணாக்கி வந்த நடிகர் சந்தானம், கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான "பேசாத கண்ணும் பேசுமே" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார்.
ஆனால் இவருக்கு ஒரு நல்ல பிரேக் கிடைத்த திரைப்படம் என்றால் அது சிம்புவின் "காதல் அழிவதில்லை" திரைப்படம் என்றால் அதே மிகையல்ல. தொடர்ச்சியாக சிம்புவின் "மன்மதன்", தளபதி விஜயின் "சச்சின்", சத்யராஜின் "இங்கிலீஷ்காரன்" என்று பல திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இவர் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
இவங்க வயசு 50ன்னு சொன்னா யாரு நம்புவா..? இளம் நாயகிகளுக்கு ஈகுவலாக கிளாமரில் அசத்தும் மலைக்கா அரோரா!
சில வருடங்களுக்கு முன்பு வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடைய "எந்திரன்" திரைப்படத்தில் கூட இவர் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு "அறை எண் 305-ல் கடவுள்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடிக்க துவங்கிய சந்தானம், கடந்த 21 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளாக பெரிய அளவில் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த சந்தானம், தற்பொழுது மீண்டும் தனது ஹீரோ பயணத்தை தொடங்கியுள்ள நிலையில் வருகின்ற பிப்ரவரி 2ம் தேதி பிரபல இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானத்தின் "வடக்குப்பட்டி ராமசாமி" என்கின்ற திரைப்படம் வெளியாகவுள்ளது.
கடந்த ஆண்டு "டிடி ரிட்டன்ஸ்", "கிக்" மற்றும் "80ஸ் பில்டப்" ஆகிய மூன்று திரைப்படங்களும் பெரிய அளவில் வெற்றி அடையாத நிலையில், "வடக்குப்பட்டி ராமசாமி" திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. சந்தனத்தின் நண்பரும், தமிழக அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் "ரெட் ஜெயண்ட்" நிறுவனம் தான் இந்த திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதற்கான உரிமைகளை தற்போது பெற்றுள்ளது. இப்பொழுது அந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகின்றது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.