Captain Miller Review: தனுஷின் 'கேப்டன் மில்லர்' மாஸ் காட்டியதா? டென்ஷன் ஆக்கியதா.! விமர்சனம்

Published : Jan 12, 2024, 11:54 AM ISTUpdated : Jan 13, 2024, 09:30 AM IST
Captain Miller Review:  தனுஷின் 'கேப்டன் மில்லர்' மாஸ் காட்டியதா? டென்ஷன் ஆக்கியதா.! விமர்சனம்

சுருக்கம்

நடிகர் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் இன்று வெளியான நிலையில், இப்படம் ரசிகர்களை எந்த அளவுக்கு கவர்ந்தது, என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.  

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், தனுஷ், சிவராஜ்குமார், பிரியங்கா மோகன் உள்ளிட்ட பல நடிகர்களின் 3 வருட உழைப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கேப்டன் மில்லர்'. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று வெளியாகி இருக்கும் இப்படம் எப்படி இருக்கிறது  என ரசிகர்கள் கூறி வருவதை தெரிந்து கொள்வோம் வாங்க...

ரசிகை ஒருவர் இப்படம் குறித்து கூறியுள்ள விமர்சனத்தில், தனுஷ்கேப்டன்மில்லராக தீ போல் நடித்துள்ளார் என எமோஜி மூலம் கூறியுள்ளார். ஓ மை காட்... என்ன ஒரு பெர்ஃபார்மர் மை மேன். கூஸ்பம்ப்ஸ் ஓவர்லோடட். பேக் கிரவுண்ட் இசையில் ஜி.வி.பிரகாஷ் ஸ்கோர் செய்கிறார் என கூறி ஒட்டு மொத்த படக்குழுவுக்கும் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

 

மற்றொரு ரசிகர் தன்னுடைய ட்விட்டர் விமர்சனத்தில், "இந்தியாவில் இதுவரை தயாரிக்கப்பட்ட மிகச்சிறந்த அதிரடித் திரைப்படம் இது என்றும் அற்புதமான பின்னணி இசையை ஜிவி பிரகாஷ் கொடுத்துள்ளதாக பாராட்டியுள்ளார். மிகவும் அருமையாக உள்ளது, ஒவ்வொரு பிரேமிலும் காட்சிகள் வெடித்துச் சிதறுகின்றன இந்தத் திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களிலிருந்து விடுபடுகிறது என கூறியுள்ளார்.

கேப்டன் மில்லர்  படம் குறித்து ட்விட்டரில் விமர்சித்துள்ள ரசிகர் ஒருவர் " முதல் பாதி மிகவும் அருமை, இரண்டாம் பாதயும் அருமையாக உள்ளது". இது அதிக ஆக்டேன் மாஸ் திரைப்படம் இல்லை. தனுஷ் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சிவராஜ்குமார் & சந்தீப்கிஷன் ஆகியோர் நீட்டிக்கப்பட்ட கேமியோ ரோலில் சிறப்பாக நடித்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

 

இப்படம் குறித்து மற்றொரு ரசிகரோ..." காலத்துக்கும் நின்னு பேசும் சம்பவம், ஜிவி பிரகாஷ் ஒவ்வொரு செகண்ட் செதுக்கிருக்காப்லம் தனுஷை பற்றி சொல்லவே வேண்டாம்... Interval Block Music Banger, IMAX மெட்டீரியலா இது என கேள்வி எழுப்பி. 5க்கு 4 மதிப்பீடு கொடுத்துள்ளார்.
 

சில நெகட்டிவ் விமர்சனங்களும் கேப்டன் மில்லர் படத்திற்கு கிடைத்து வருகின்றனர்... நெகடிவாக இப்படத்தை விமர்சித்துள்ள ரசிகர் ஒருவர் "இந்த கட்டண மதிப்புரைகளைப் பார்த்து அதிக எதிர்பார்ப்புகளுடன் சென்று ஏமாற்றமடைய வேண்டாம், படம் சராசரி தான், பார்க்கக்கூடியது ஆனால் மிகவும் நன்றாக இல்லை". என தெரிவித்துள்ளார்.
 

 

'கேப்டன் மில்லர்' படம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மற்றொரு ரசிகரோ... எளிமையாக சொல்லவேண்டும் என்றால், டிக்கெட் முன்பதிவு செய்து படத்தை பாருங்கள். சரியான ஸ்கிரிப்ட் சிறந்த நடிப்பு. தனுஷின் நடிப்பு அனைவருக்கும் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். முடிந்தால் IMAX-ல் இப்படத்தை பார்க்கவும் என தெரிவித்துள்ளார்.

 

'கேப்டன் மில்லர்' படத்திற்கு பல பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வந்தாலும், அதே அளவில் சிலர் நெகடிவ் விமர்சனங்களையும் கொடுத்து வருகிறார்கள் என்பதே உண்மை. அதிக எக்ஸ்பெக்டேஷனுடன் சென்று டென்சன் ஆவதை விட, எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்று படத்தை பார்த்து ரசியுங்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

தோல்விப் படத்தால் கிடைத்த காதல்; நயன்தாராவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த க்ரிஷ்ணா வம்சி!
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி! நவரச நாயகன் கார்த்திக் உடல்நலம் குறித்த சமீபத்திய தகவல்!