'காதல் கோட்டை' வாய்ப்பை தவற விட்டதால் நடுரோட்டில் அழுதேன்...! பிரபல நடிகர் ஓபன் டாக்...!

 
Published : Jul 02, 2018, 07:20 PM ISTUpdated : Sep 19, 2018, 02:36 AM IST
'காதல் கோட்டை' வாய்ப்பை தவற விட்டதால் நடுரோட்டில் அழுதேன்...! பிரபல நடிகர் ஓபன் டாக்...!

சுருக்கம்

kolangal serial actor abishek miss the kathalkottai movie

நடிகர் அஜித் மற்றும் நடிகை தேவயாணி வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்திய திரைப்படம் என்றால் அது 1996 ஆம் ஆண்டு வெளியாகி, காதலர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை தழுவிய 'காதல் கோட்டை' திரைப்படம் எனலாம்.

தற்போது அஜித் நடிப்பில் பல திரைப்படங்கள் வெளியாகி சாதனைகள் படைத்தாலும், இன்று முதல் 'காதல் கோட்டை' படத்தின் சாதனையை முறியடிக்க முடியவில்லை. 

இந்த திரைப்படத்தில் முதலில் நடிக்கும் வாய்ப்பு, நடிகர் அபிஷேக்கை தான் தேடி வந்ததாம். இவர் வேறு யாரும் இல்லைங்க...!  நடிகை தேவயாணி நடித்த 'கோலங்கள்' சீரியலில் அவருக்கு கணவராக நடித்திருப்பாரே அவர் தான்.

இவர் இந்த படத்தில் நடிக்க துவங்கிய ஒரு சில நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நின்று போய் விட்டதாம். பின் இவரை மீண்டும் நடிக்க கூறி அழைத்ததற்கு ஒரு சில காரணங்களால் நடிக்க மறுத்து விட்டாராம்.

பின் இந்த படத்தில் கதாநாயகனாக அஜித்தை நடிக்க வைத்து எடுத்தார்களாம். இந்த படம் வெளியாகி மிகபெரிய வெற்றி பெற்ற போது, இந்த படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை தவற விட்டு விட்டோமே... என எண்ணி, அபிஷேக் நடு ரோட்டில் கூட அமர்ந்து அழுதுள்ளாராம். இந்த தகவலை அவரே கூறியுள்ளார்.  

ஒருவேளை இந்த படத்தில் அபிஷேக் நடித்திருந்தால், முன்னணி நடிகர்களில் ஒருவராக இவரும் இருந்திருப்பாரோ... என்னவோ...? ஆனால் இந்த ஒரு படத்தின் இழப்பு தற்போது இவருடைய திரையுலகையே மாற்றி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அருண் விஜய்யின் 'ரெட்ட தல' 25-ல் ரிலீஸ்; டிரெய்லருக்கு அமோக வரவேற்பு
பிரம்மாண்ட கூட்டணி! ‘டேவிட் ரெட்டி’ படத்தில் ராம் சரண் - சிம்பு கேமியோ? மிரட்டும் அப்டேட்!