
மெர்சல் திரைப்படத்தால் சுமார் 10 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்ட நிலையில் சர்கார் படத்தின் விநியோக உரிமையை கொடுத்தால் இழப்பை சரி செய்துவிட முடியும் என்று தேனாண்டாள் பிலிம்ஸ் நடிகர் விஜய் தரப்பை அணுகிய நிலையில் சாதகமான பதில் எதுவும் வரவில்லை. அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்த மெர்சல் திரைப்படம் கடந்த தீபாவளிக்கு வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு பெரும் லாபம் கிடைத்தது. ஆனால் திட்டமிடப்படாத செலவு மற்றும் இயக்குனர் அட்லியின் ஊதாரித்தனத்தால் முதலில் போட்ட பட்ஜெட்டை தாண்டி படத்திற்கு செலவு பிடித்தது.
மெர்சல் தயாரிப்பு பிரச்சனையால் ஏற்பட்ட 10 கோடி ரூபாய் நஷ்டத்தை சரி செய்ய விஜய் தங்களுக்கு மேலும் ஒரு திரைப்படம் நடித்து கொடுக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பில் தேனாண்டாள் பிலிம்ஸ் இருந்து வந்தது. இதற்கு காரணம், அஜித் நடிப்பில் வெளியான விவேகம் படு தோல்வி அடைந்தது. ஆனால் விவேகம் படத்தின் தயாரிப்பாளருக்கே தனது விஸ்வாசம் படத்தையும் தயாரிக்கும் பொறுப்பை அஜித் கொடுத்துள்ளார். இதே பாணியில் விஜயும் தங்களுக்கு அடுத்த படத்தை கொடுப்பார் என்று தேனாண்டாள் பிலிம்ஸ் நினைத்தது. ஆனால் விஜய் சன் பிக்சர்சுக்கு தனது கால்ஷீட்டை கொடுத்துவிட்டார். இருந்தாலும் பரவாயில்லை சர்கார் படத்தின் விநியோக உரிமையையாவது விஜய் தங்களுக்கு பெற்றுத்தர வேண்டும் என்று தேனாண்டாள் பிலிம்ஸ் கேட்டு வருகிறது. ஆனால் இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் விஜய் தனது சூட்டிங்கில் பிசியாக உள்ளார்.
ஆனால் தேனாண்டாள் பிலிம்சோ விஜய் படத்தின் விநியோக உரிமை கிடைத்தால் தான் மெர்சலில் நஷ்டம் அடைந்த தொகையை ஈடுகட்டி தங்களின் பிரமாண்ட சங்கமித்ரா படத்தை தொடங்க முடியும் என்று காத்துக் கொண்டிருக்கிறது. இது குறித்து விஜய் தரப்பில் விசாரித்த போது, மெர்சல் படத்தின் தயாரிப்பு செலவில் ஏற்பட்ட பிரச்சனைக்கு தயாரிப்பாளர் தேனாண்டாள் பிலிம்சும், இயக்குனர் அட்லியும் மட்டுமே பொறுப்பு. பட்ஜெட்டை தாண்டி செலவு செய்வது குறித்து தயாரிப்பாளர் தரப்பு விஜயிடம் பேசவில்லை.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.