இந்த தேதியிலாவது ரிலீஸாகுமா நயன்தாராவின் ‘கொலையுதிர்காலம்?’...

Published : Jul 18, 2019, 05:40 PM IST
இந்த தேதியிலாவது ரிலீஸாகுமா நயன்தாராவின் ‘கொலையுதிர்காலம்?’...

சுருக்கம்

ஏற்கனவே இருமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு கடைசி நேரத்தில் தடைபெறப்பட்ட நயன்தாராவின் ‘கொலையுதிர்காலம்’படத்தின் அதிகாரபூர்வமான ரிலீஸ் தேதியை படக்குழு இன்று சற்றுமுன்னர் அறிவித்தது.  

ஏற்கனவே இருமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு கடைசி நேரத்தில் தடைபெறப்பட்ட நயன்தாராவின் ‘கொலையுதிர்காலம்’படத்தின் அதிகாரபூர்வமான ரிலீஸ் தேதியை படக்குழு இன்று சற்றுமுன்னர் அறிவித்தது.

நயன்தாரா நடித்துள்ள `கொலையுதிர் காலம்' படம் தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கித்தவித்து வருகிறது. சக்ரி டோலட்டி இயக்கியிருக்கும் இந்த படம் மர்மம் கலந்த திரில்லர் பாணியில் உருவாகி இருக்கிறது. `ஹஷ்' என்ற ஹாலிவுட் படத்தை தழுவி இந்த படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.  தணிக்கையில் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

எக்ஸ்ட்ரா என்டர்டெயின்மெண்ட் சார்பில் வி.மதியழகன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கோரி கெர்யக் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராமேஸ்வர் எஸ்.பகத் படத்தொகுப்பை கவனிக்கிறார். இப்படம் கடந்த மாதம் 14-ந் தேதி வெளியாக இருந்தது.இதனிடையே,  அமரர் சுஜாதாவின்கொலையுதிர்காலம் கதை உரிமை தன்னிடம் இருப்பதால் அதே   டைட்டிலுடன் படத்தை வெளியிடக்கூடாது என்று பாலாஜி குமார் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்தது.

இந்த தடையை நீக்க கோரி தயாரிப்பாளர் மதியழகன் மனுதாக்கல் செய்தார். காப்புரிமை இல்லாத டைட்டிலை யார் வேண்டுமானாலும் பயன்படுத்த உரிமை உண்டு எனக்கூறி படத்துக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை நீக்கி நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது.இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வருகிற 26-ந் தேதி ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே படத்தின் இந்தி வெர்சன் ‘காமோஷி’என்ற பெயரில் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு ரிலீஸாகி படு தோல்வியைச் சந்தித்தது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

25 ஆண்டுகளில் முதன்முறையாக படையப்பா படம் பார்த்த ரம்யா கிருஷ்ணன்... இத்தனை வருஷமா ஏன் பார்க்கல தெரியுமா?
கடைசியில் மீனாவிடம் 'சென்டிமென்ட்' டிராமாவை அரங்கேற்றிய தங்கமயில்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 விறுவிறுப்பு!