முன்னதாக யுவன் சங்கர் ராஜா பாடிய ஒரு பாடலும், சந்தோஷ் நாராயணன் பாடிய ஒரு பாடலும் வெளியானது. அது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் குரு சோமசுந்தரம். ஆரண்ய காண்டம், பாண்டியநாடு, ஜிகர்தண்டா போன்ற படங்களில் குரு சோமசுந்தரம் நடித்திருந்தாலும் ஜோக்கர் படத்தின் மூலம் தான் அனைவராலும் அறியப்பட்டார்.
ஜோக்கர் திரைப்படத்தினை தொடர்ந்து இவர் நடித்திருந்த திரைப்படம் 'ஓடு ராஜா ஓடு' இப்படம் சரியான அளவில் மக்கள் மத்தயில் பேசப்படவில்லை. இப்படத்தினை தொடர்ந்து குரு சோமசுந்தரம் நடித்திருக்கும் திரைப்படம் 'வஞ்சகர் உலகம்'. இப்படத்தினை மனோஜ் பிதா என்பவர் இயக்கியிருக்கிறார். இப்படத்திற்கு சி.எஸ்.சாம் இசையமைத்துள்ளார். படத்தின் ஒவ்வொரு பாடல்களாக வெளியிட்டு வருகின்றனர் படக்குழுவினர்.
முன்னதாக யுவன் சங்கர் ராஜா பாடிய ஒரு பாடலும், சந்தோஷ் நாராயணன் பாடிய ஒரு பாடலும் வெளியானது. அது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. தற்போது இப்படத்தில் 'கிறுக்கன்' என்ற ஒரு சிங்கிள் டிராக் இன்று மாலை வெளியாகவுள்ளது. அதனால் 'கிறுக்கன்' என்ற சொல் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றது.