வருத்தமான தகவலை கூறிய விஜயலட்சுமி...! பிக்பாஸ்கே அதிர்ச்சி கொடுத்த போட்டியாளர்கள்..!

Published : Aug 31, 2018, 04:47 PM ISTUpdated : Sep 09, 2018, 07:56 PM IST
வருத்தமான தகவலை கூறிய விஜயலட்சுமி...! பிக்பாஸ்கே அதிர்ச்சி கொடுத்த போட்டியாளர்கள்..!

சுருக்கம்

பிக்பாஸ் போட்டியாளர்கள் இந்த வாரம், தங்களுடைய உறவினர்களை பார்த்த சந்தோஷத்தில் உள்ளனர். ஆனால் இவர்கள் தங்களுடைய மனைவி, காதலி, அம்மா, போன்றவர்களை பார்த்ததும் தங்களுக்கு கொடுத்த டாஸ்க்கை உதாசீனப் படுத்திவிட்டு, அவர்களை கட்டி அனைத்தும்

பிக்பாஸ் போட்டியாளர்கள் இந்த வாரம், தங்களுடைய உறவினர்களை பார்த்த சந்தோஷத்தில் உள்ளனர். ஆனால் இவர்கள் தங்களுடைய மனைவி, காதலி, அம்மா, போன்றவர்களை பார்த்ததும் தங்களுக்கு கொடுத்த டாஸ்க்கை உதாசீனப் படுத்திவிட்டு, அவர்களை கட்டி அனைத்தும், ஆனந்த கண்ணீர் விட்டும் தங்களுடைய அன்பை வெளிப்படுத்தினர்.

ஒருவர் கூட பிரீஸ் டாஸ்கை சரியாக செய்து முடிக்காததால், இந்த வாரம் போட்டியாளர்களுக்கு கொடுக்க இருந்த லக்சுரி பட்ஜெட் இல்லை என பிக்பாஸ் கடிதம் மூலம் தெரிவிக்கிறது.

இதனால் போட்டியாளர்கள் அனைவரும் அதிர்ச்சியடைவார்கள் என்று பார்த்தல், அனைவரும் கை தட்டி, தங்களுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் நடிகை மும்தாஜ் தங்களுடைய குடும்பத்தினரை பார்த்தது தான் லக்சுரி பட்ஜெட்டை விட பெரியது என கூறுகிறார். சென்றாயனும் இந்த லக்சுரி பட்ஜெட்டே வேண்டாம் என கூறுகிறார். 

இந்த தகவலை விஜயலட்சுமி கூறியதும், சாப்பாடு கிடைக்க வில்லை என்றாலும், அனைத்து போட்டியாளர்களும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது பிக்பாஸ்கே அதிர்ச்சியாக இருந்திருக்கலாம். இதனால் திடீர் என வீட்டிற்குள் வந்த ஜோக்கர் இது ஆனந்தம் படம் இல்லை பிக்பாஸ் 2 என அனைவருக்கும் நினைவு படுத்திவிட்டு சென்றது. 

PREV
click me!

Recommended Stories

Ayyanar Thunai : டைவர்ஸ் வழக்கில் ட்விஸ்ட்... நிலாவின் முடிவால் பீதியில் சோழன்...!
Siragadikka Aasai : சிந்தாமணியின் திருவிளையாடல் ஆரம்பம்... ரோகிணியிடம் சிக்கப்போகும் மனோஜ்