பிக்பாஸ் சீசன் 2-ல் கலந்து கொண்ட பிரபலங்களில் சற்று வித்தியாசமாக கணவன் - மனைவியாக வாழ்ந்த பாலாஜி மற்றும் நித்யா ஆகிய இருவரும் கலந்து கொண்டனர். ஆனால் இவர்கள் இருவரும் ஒரு சில கருத்து வேறுபாடு காரணமாக தற்போது பிரிந்து வாழ்கிறார்கள்.
பிக்பாஸ் சீசன் 2-ல் கலந்து கொண்ட பிரபலங்களில் சற்று வித்தியாசமாக கணவன் - மனைவியாக வாழ்ந்த பாலாஜி மற்றும் நித்யா ஆகிய இருவரும் கலந்து கொண்டனர். ஆனால் இவர்கள் இருவரும் ஒரு சில கருத்து வேறுபாடு காரணமாக தற்போது பிரிந்து வாழ்கிறார்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நித்யா கலந்து கொள்வதை அறிந்த பாலாஜி தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்கிற ஆசையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதனால் இவர்கள் இருவருக்குள்ளும் சண்டை வெடிக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் பிக்பாஸ் எதிர்ப்பார்த்த அளவிற்கு பெரிதாக இருவருக்குள்ளும் எந்த பிரச்னையும் வெடிக்க வில்லை. இதன் காரணமாகவோ என்னவோ நித்யா விரைவிலேயே பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.
undefined
இந்நிலையில், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரீஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 75 நாட்களுக்கு பின் போட்டியாளர்கள் அனைவரும் தங்களுடைய குடும்பத்தினர்களை காண ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளதை கொண்டாடி வருகிறார்கள்.
ஏற்கனவே, மும்தாஜ் குடும்பத்தினர், ஐஸ்வர்யாவின் அம்மா, யாஷிகவின் சகோதரன், சகோதரி, ஜனனியின் அம்மா, மற்றும் டேனியின் காதலி ஆகியோர் பிக் பாஸ் வீட்டின் உள்ளே வந்து இவர்களை சந்தித்து விட்டு சென்றுள்ள நிலையில், இன்று சென்றாயன் வீட்டில் இருந்து அவருடைய மனைவி, மற்றும் பாலாஜியின் மனைவி நித்யா ஆகியோர் வருவது ப்ரோமோ மூலம் உறுதியாகி உள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன், பாலாஜியை பார்க்க விருப்பம் இல்லாமல் மகள் அனுப்பிய பரிசையும் அதனுடன் ஒரு தோழியாக உங்களுக்கு பக்கபலமாக இருப்பேன் என நித்யா கடிதம் எழுதி அனுப்பி வைத்தார். இந்த கடிதத்தை பார்த்து முதல் முறையாக பாலாஜி மனம் உருகி கண்ணீர் விட்டு அழுதார். ஒரு வழியாக அவரை அனைத்து போட்டியாளர்களும் தேற்றினர்.
பாலாஜி அழுவதை பார்த்து... ஒன்பது வருடத்தில் நான் சொன்ன வார்த்தைக்காக பாலாஜி அழுவது இது தான் முதல் முறை என உருக்கமான ஒரு பதிவை போட்டிருந்தார் நித்யா.
இந்நிலையில் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம், மீண்டும் பாலாஜியை பார்க்க தன்னுடைய மகள் போஷிகாவுடன் பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தருகிறார் நித்யா. முன்பை விட மிகவும் பாசமாக பாலாஜியிடம் பேசுகிறார். "ஒன்பது வருடத்தில் நீ முதல் முறையாக அழுதது மிகவும் வேதனையாக இருந்தது என அவருடைய உணர்வை பாலாஜியிடம் தெரிவிக்கிறார்".
கடைசியில், "நீ திருந்தி விட்டதாக இங்கு இருக்கும் அனைவரும் சொல்கிறார்கள்... என நித்யா சிரிக்கிறார்". பாலாஜி - நித்யா சேர்ந்து வாழ வேண்டும் என ஆரம்பத்தில் இருந்து ஆசைப்பட்ட சென்றாயன் அவர் திருந்திட்டாரு மா என கூறுகிறார். இவரின் சிரிப்பு பாலாஜியை இவர் ஏற்றுக்கொண்டார் என்பதை காட்டுவது போல் உள்ளது. பல போராட்டங்களுக்கு பின் இவர்கள் இருவரும் இணைவார்களா..? நித்யா இன்று என்ன சொல்ல போகிறார் என ரசிகர்களும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். எப்படியோ பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது காதலோடு நித்யாவுடன் சேர வேண்டும் என சுற்றி வந்த பாலாஜி தற்போது ஒரு துளி கண்ணீர் மூலம் மனைவி நித்யாவின் மனதை மாற்றிவிட்டார்.
மாற்றம் ஒன்றே மாறாதது! 🤔👍 - தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. pic.twitter.com/apeJKnlAmp
— Vijay Television (@vijaytelevision)