
பிரியா வாரியார் கண்ணடித்தது தவறில்லை...உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...!
ஒரு அதார் லவ் என்ற படத்தில் இடம் பெற்ற பாடல் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தவர் பிரியா வாரியார்.இதில் இடம் பெற்ற கன்னசிவு காட்சி மூலம் இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதன் பின்னர் இந்த பாடல் இஸ்லாமியர்களின் உணர்வுகளை பாதிக்கிறது என்றும், முகமது நபியின் மனைவியை பற்றி தவறாக பேசுகிறது என்று ஹைதராபாத் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இது குறித்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைப்பெற்று வந்தது. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என பிரியா வாரியர் சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்து இருந்தார்.இதனை ஏழாம் விசாரித்த உச்ச நீதிமன்றம் பிரியா வாரியர் கண்ணடித்தது தவறில்லை என கூறி அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தது.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மற்றும் இதெல்லாம் ஒரு வாழ்க்கா என பொதுமக்கள் விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர். அதுமட்டுமில்லாமல், இந்த வழக்கை உச்சநீதிமன்றம் எடுத்து தேவை இல்லாமல் நேரத்தை வீணடித்து உள்ளது என பலரும் விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.