Actor yash : சிவகார்த்திகேயனின் வாழ்த்துக்கு டுவிட்டர் வாயிலாக நன்றி தெரிவித்துள்ள நடிகர் யாஷ், தான் “உங்களது டாக்டர் படத்தை பார்த்து மிகவும் என்ஜாய் பண்ணேன். அது சிறந்த படம்” என பாராட்டி உள்ளார்.
யாஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் கே.ஜி.எஃப் படத்துக்கு உலகமெங்கும் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. தமிழ் புத்தாண்டு தினத்தன்று 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைகளில் இப்படம் வெளியானது. இப்படம் பாசிடிவ் விமர்சனங்களை பெற்று வருவதோடு பாக்ஸ் ஆபிஸிலும் பட்டைய கிளப்பி வருகிறது.
கே.ஜி.எஃப் 2 திரைப்படம் வெளியான மூன்றே நாளில் ரூ.350 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதேநிலை நீடித்தால் ஒரே வாரத்தில் இப்படம் ரூ.1000 கோடி வசூலை எட்டி விடும் என கூறப்படுகிறது. கே.ஜி.எஃப் 2 படத்தை ரசிகர்கள் கொண்டாடுவதைப் போல் திரையுலக பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர்.
Thank you brother, I enjoyed watching your film Doctor. It was a great film 😊
— Yash (@TheNameIsYash)
சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் கே.ஜி.எஃப் 2 திரைப்படத்தை பார்த்து அப்படத்தின் தயாரிப்பாளருக்கு போன் செய்து பாராட்டி இருந்தார். அதேபோல் நடிகர் சிவகார்த்திகேயன் கே.ஜி.எஃப் 2 திரைப்படம் ரிலீசான தினத்தன்று அப்படம் வெற்றியடையவும், பாக்ஸ் ஆபிஸில் பல்வேறு சாதனைகளை படைக்கவும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், சிவகார்த்திகேயனின் வாழ்த்துக்கு டுவிட்டர் வாயிலாக நன்றி தெரிவித்துள்ள நடிகர் யாஷ், தான் “உங்களது டாக்டர் படத்தை பார்த்து மிகவும் என்ஜாய் பண்ணேன். அது சிறந்த படம்” என பாராட்டி வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயனுக்கே சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். இதற்கு சிவகார்த்திகேயனும் நன்றி தெரிவித்து டுவிட் செய்துள்ளார்.
இதையும் படியுங்கள்... குடிபோதையில் தான் கதை எழுதுவேன்.... ஓப்பனாக பேசி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ‘கே.ஜி.எஃப்’ இயக்குனர்