Santhanam: தனியார் தொலைகாட்சியின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் சந்தானம். இவர் தற்போது நகைச்சுவை, நடிகராகவும், கதாநாயகன் வேடத்திலும் தமிழ் மொழியில் மட்டுமே நடித்து வருகிறார்.
தனியார் தொலைகாட்சியின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் சந்தானம். இவர் தற்போது நகைச்சுவை, நடிகராகவும், கதாநாயகன் வேடத்திலும் தமிழ் மொழியில் மட்டுமே நடித்து வருகிறார்.
சிம்புவின் ஆரம்ப கால பயணம்:
இவர் தனது கேரியரில் சிம்புவுடன் சேர்ந்து, காதல் அழிவதில்லை, அலை, மன்மதன், வல்லவன், வானம் என பல்வேறு படங்களில் பணியாற்றி உள்ளனர். நடிகர் சிம்பு தனது படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க தொடர்ந்து வாய்ப்பளித்து வந்தார்.
இதையடுத்து, இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தேடி வர தமிழ் சினிமாவின் பிஸியான காமெடி நடிகராக சந்தானம் வலம் வர துவங்கினார். குறுகிய காலத்தில் விஜய், அஜித், ரஜினி, சூர்யா என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் நகைச்சுவை மன்னனாக ஜொலித்தார். தமிழ் சினிமாவில் இவரது காமெடிக்கென ஓடிய படங்கள் ஏராளம் உள்ளன.
தமிழ் சினிமாவில் ஹீரோவாக:
இதையடுத்து படிப்படியாக நகைச்சுவை வேடங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட சந்தானம், ஹீரோவாக கடந்த 2014-ம் ஆண்டு அவதாரம் எடுத்தார். முதன் முதலில் தமிழ் திரையுலகில் ஹீரோவாக வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படம் மூலம் அறிமுகமானார்.
இதையடுத்து இனிமே இப்படித்தான், டகால்டி, பிஸ்கோத், பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா, சபாபதி என பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்தார். இருப்பினும், இந்த எல்லா படங்களுக்கும் ஓர் அளவிற்கு தான் ரீச் கொடுத்தது. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான தில்லுக்கு துட்டு படம் மக்கள் மனதில் ஓரளவிற்கு இடம் பிடித்தனர்.
கன்னட ஹீரோவாகும் சந்தானம்:
இதையடுத்து, கண்ணாயிரம், மண்ணவன் வந்தானடி, சர்வர் சுந்தரம் ஆகிய படங்கள் தற்போது கை வசம் உள்ளனர். இந்நிலையில், இவர் தற்போது கன்னட படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரசாந்த் ராஜ் என்பவர் இயக்கவுள்ள படத்தில் சந்தானம் நடிக்கவிருப்பதாகவும் , இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.