Manimegalai: 'குக் வித் கோமாளி' மணிமேகலை வீட்டில் விலையுயர்ந்த பொருள் திருட்டு...! போலீசார் விசாரணை..!

Anija Kannan   | Asianet News
Published : Apr 17, 2022, 09:55 AM ISTUpdated : Apr 17, 2022, 09:59 AM IST
Manimegalai: 'குக் வித் கோமாளி' மணிமேகலை வீட்டில் விலையுயர்ந்த பொருள் திருட்டு...! போலீசார் விசாரணை..!

சுருக்கம்

Manimegalai: மணிமேகலை ‘குக் வித் கோமாளி’  நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு பட்டி தொட்டி எங்கும் பரவ, மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்தவர். 

கடந்த 2009 ஆம் ஆண்டு தொகுப்பாளினியாக, சன் டிவியில் ஒளிபரப்பான சன் மியூசிக்கில் துவங்கினார். அவர் தொகுத்து வழங்கிய ஃபிரியா விடு, வெட்டி பேச்சு போன்றவை  ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

மணிமேகலை-ஹூசைன் திருமணம்

மணிமேகலைக்கும், டான்ஸ் மார்ஸ்டர்  ஹூசைன் என்பவருக்குக்கும் இடையே காதல் மலர்ந்தனர். இதையடுத்து, மணிமேகலை தனது  நீண்ட நாள் காதலனான  ஹூசைன் என்பவரை பெற்றோரின் எதிர்ப்பையும்  மீறி கடந்த 2017ஆம் ஆண்டு, திருமணம் செய்து கொண்டார். அதிலிருந்து கொஞ்ச நாட்களில் அவர் சன் மியூசிக்கில் இருந்து விலகினார்.

'குக் வித் கோமாளி':

இதையடுத்து, விஜய் டிவியில் தொகுப்பாளராக களமிறங்கிய மணிமேகலை.  பின்னர் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு பட்டி தொட்டி எங்கும் பரவ மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்தவர்.ரசிகர்களின் ஏகபோக வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியாக 'குக் வித் கோமாளி'  நிகழ்ச்சியின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டவர். 

கடந்த இரண்டு சீசனை தொடர்ந்து, தற்போது ஒளிபரப்பாகி வரும் மூன்றாவது சீசனிலும்  இவர் அடிக்கும் காமெடி அல்டிமேட், ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும். தனது வேடிக்கையான காமெடி கவுண்டர்களின் மூலம் ரசிகர்களை ஈர்த்துள்ளதோடு, சமூக ஊடகத்தில் மில்லியன் கணக்கான ஃபாலோயர்களையும் வைத்துள்ளார் .

இந்த நிகழ்ச்சியில் சிவாங்கி, புகழ், பாலாவை அடுத்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் மணிமேகலை. சிவனேனு இருக்கும் குக்குகளை  கூட, தன்னுடைய வாயாலேயே பல பிரச்சனையில் சிக்க வைத்து, பல சிறப்பான சம்பவங்களை அரங்கேற்றி வருகிறார். 

விலையுயர்ந்த பொருள் திருட்டு:

அத்துடன், இவர் தனது கணவர் ஹூசைனுடன் இணைந்து தனியாக யூடியூப் சேனலும் நடத்தி வருகிறார். இதன் மூலமும் இவர்கள் லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டி வருதாக சொல்லப்படுகிறது.

மணிமேகலை சமீப காலமாக, வீடு கட்ட இடம்,  பல விலை உயர்ந்த சொகுசு கார்களை வாங்கி குவித்து வருகிறார். இதற்கு பல்வேறு  ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து இருந்தனர். 

போலீசார் விசாரணை..!

இந்நிலையில், மணிமேகலை தங்களுக்கு சொந்தமான பைக்கை நண்பரின் வீட்டில் நிறுத்தி வைத்திருக்கின்றனர். அதை மரம் நபர்கள் யாரோ திருடி சென்றுவிட்டனர் இதுகுறித்து போலீசில் புகார் அளித்து இருக்கிறாரார்கள்

மேலும் படிக்க....Shruti Haasan : சைஸ் கேட்ட நெட்டிசனுக்கு... ‘நீயே அளந்துக்கோ’னு போட்டோ அனுப்பி ஷாக் கொடுத்த சுருதிஹாசன்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?