கீர்த்தி சுரேஷ் பாரம்பரிய உணவுகளுடன் ஆயுதபூஜையை கொண்டாடினார்...
குழந்தை நட்சத்திரமாக திரைத்துறைக்கு அறிமுகமாகியிருந்த கீர்த்தி சுரேஷ். மலையாளத்தில் பலப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக என்ட்ரி கொடுத்திருந்தார். அதை அடுத்து இது என்ன மாயம் என்னும் தமிழ் படத்தின் மூலம் நாயகியாக அவதாரம் எடுத்த கீர்த்தி சுரேஷ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் கலக்கி வருகிறார். ஆனால் முதல் படம் இவருக்கு போதுமான ஓப்பனிங்கை தரவில்லை. பின்னர் ரஜினி முருகன் படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள் மனதில் பதிந்து விட்டார்.
தொடர்ந்து தனுஷுடன் தொடரி, சிவகார்த்திகேயனுடன் ரெமோ, விஜயுடன் பைரவா, சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம், விஷாலுடன் சண்டைக்கோழி 2, விஜயுடன் சர்க்கார் உள்ளிட்ட படங்களில் முன்னணி நாயகர்களுடன் ஜோடியாக நடித்தார். இதன் மூலம் டாப் 10 நாயகிகளில் ஒருவராகி விட்டார் கீர்த்தி. மேலும் மகாநதி படத்தின் மூலம் பல புகழ்களை சூட்டிக்கொண்டார். நடிகையர் திலகம் சாவித்திரி தேவி வேடமிட்டு அவர் போலவே வாழ்ந்து காட்டிய கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது கிடைத்தது.
மேலும் செய்திகளுக்கு...வயிற்றில் குழந்தையுடன் அழகு தேவதையாய் ஆலியாபட்..வளைகாப்பு போட்டோஸ் இதோ
முன்னணி நடிகையாகிவிட்டதன் காரணமாக தனக்கு ஏற்ற கதைகளை மட்டும் ஜூஸ் செய்ய ஆரம்பித்தார் கீர்த்தி சுரேஷ். அதன்படி பென்குயின், மிஸ் இந்தியா உள்ளிட்ட படங்கள் வெளியாகியிருந்தன. ஆனால் இவை வரவேற்பை பெறவில்லை. பின்னர் பழைய நிலைக்கே திரும்பினார் கீர்த்தி சுரேஷ். இதையடுத்து ரஜினிகாந்தின் அண்ணாத்த படைத்தல் நடித்திருந்தார். இந்த படத்தில் தங்க மீனாட்சியாக தோன்றி ரசிகர்களை கவர்ந்திருந்தார். பின்னர் அரபிக் கடலின் சிங்கம், குட்லக் சகி, சர்க்கார் வாரி பாட்டா, வசி உள்ளிட்ட படங்களில் தோன்றியிருந்தார்.
மேலும் செய்திகளுக்கு...வண்ண வண்ண பிகினியுடன் ரசிகர்களை கிறங்கடிக்கும் பிரியா வாரியார்...
தற்போது உதயநிதிக்கு ஜோடியாக மாமன்னன்படத்தில் நடித்து முடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், பாலிவுட் என கலக்கி வரும் இவர் முன்பு ஸ்கின் ஷோ கட்டமாட்டேன் என கூறியிருந்த கொள்கையை கைவிட்டு சமீபகாலமாக கவர்ச்சியில் இறங்கிவிட்டார். இவரின் புகைப்படங்கள் வைரலாக தொடங்கின. இந்நிலைகள் ஆயுத பூஜை கொண்டாட்டம் குறித்த புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார். தனது காருக்கு பூஜை செய்வது மற்றும் தனது செல்லப்பிராணியுடன் காரில் பயணிப்பது, பாரம்பரிய உணவை உண்ணுவது போன்ற புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.