இப்பவே நயன்தாராவை பாலோ பண்ணும் கீர்த்தி சுரேஷ்! வேற லெவல் உருவாகும் அடுத்த படம்!

Published : May 11, 2019, 11:50 AM IST
இப்பவே நயன்தாராவை பாலோ பண்ணும் கீர்த்தி சுரேஷ்! வேற லெவல் உருவாகும் அடுத்த படம்!

சுருக்கம்

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் சாவித்தியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட 'மகாநடி'. இந்த படம் வெளியாகி இன்றுடன் ஒரு வருடம் முடிவடைந்துள்ளது.  

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் சாவித்தியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட 'மகாநடி'. இந்த படம் வெளியாகி இன்றுடன் ஒரு வருடம் முடிவடைந்துள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து தன்னுடைய ஒவ்வொரு படங்களையும் மிக கவனத்துடன் தேர்வு செய்து நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். அந்தவகையில், திரையுலகில் அறிமுகமாகி ஒரு சில வருடங்களிலேயே இவர் நடிகை நயன்தாராவை ஃபாலோ பண்ண துவங்கிவிட்டார் என்பது, இவர் தேர்வு செய்யும் படங்கள் மூலம் தெரிகிறது.

தற்போது தெலுங்கில் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்படும் ஒரு படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார்.  மேலும் பாலிவுட்டில் பிரபல நடிகர் அஜய் தேவ்கனுக்கு மனைவியாக ஒரு படத்திலும், தமிழில் சூப்பர்ஸ்டாரின் 'பேட்ட'  படத்தை இயக்கிய, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ஞ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில், கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடிக்க உள்ளார். 

இந்த படத்தை ஈஸ்வரன் என்கிற அறிமுக இயக்குனர் இயக்க உள்ளார். ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் வெளியான 'மேயாத மான்', 'மெர்குரி', ஆகிய படங்களின் வரிசையில் இந்த படமும் வித்தியாசமான கதைக்களத்துடன் வேற லெவலில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!