48 மணி நேர பஞ்சாயத்துக்குப் பின் விஷாலின் ‘அயோக்யா’ரிலீஸானது இப்படித்தான்...

By Muthurama LingamFirst Published May 11, 2019, 11:26 AM IST
Highlights

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று ரிலீஸாகாமல் தள்ளிப்போன விஷாலின் ‘அயோக்யா’ ஒரு நாள் தாமதமாக வெளியாகியுள்ள நிலையில் படம் தொடர்பாக 48 மணி நேரத்துக்கும் பஞ்சாயத்துகள் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று ரிலீஸாகாமல் தள்ளிப்போன விஷாலின் ‘அயோக்யா’ ஒரு நாள் தாமதமாக வெளியாகியுள்ள நிலையில் படம் தொடர்பாக 48 மணி நேரத்துக்கும் பஞ்சாயத்துகள் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

விஷால் நடித்திருக்கும் ’அயோக்யா’ படம் நேற்று ( மே 10) வெளியாகவேண்டியது. ஆனால் வெளியாகவில்லை. அதனால் முன்பதிவு செய்திருந்தவர்களுக்கு டிக்கெட் பணத்தை திருப்பித் தரவேண்டிய தர்மசங்கடமான நிலை தியேட்டர்காரர்களுக்கு ஏற்பட்டது.

படத்தைத் தயாரித்திருக்கும் மது, இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கி படமெடுத்திருக்கிறார்.ஆனால் இப்படத்தின் தென்னிந்திய உரிமையை மனீஷ் என்பவர் வாங்கியிருக்கிறார். அதனால் தமிழ் உரிமையை மட்டும் தனியாக வாங்கியது தவறு, சட்டப்படி இப்படம் எனக்குத்தான் சொந்தம் என்று பஞ்சாயத்தைக் கிளப்பியிருக்கிறார்.அதன் காரணமாகவே படம் வெளியாகவில்லை என்று சொல்லப்படுகிறது.

இதற்காக நடிகர் விஷாலும் கடும் முயற்சிகள் எடுத்து ஒன்றும் நடக்கஅதேசமயம் படத்தை வாங்கி வெளியிடும் நிறுவனம் மற்றும் விநியோகஸ்தர்களின் நெருக்குதல் காரணமாக, மே 9 ஆம் தேதி இரவு முழுக்க நடந்த பேச்சுவார்த்தை நேற்று பகலிலும் தொடர்ந்தது. இப்படி 48 மணி நேரத்துக்கும் மேல் நடந்த பேச்சுவார்த்தையில், முதலில் படத்தை வெளியிட்டுவிடுவோம், அதன்பின்பு பணம் யார் கொடுப்பது? என்று முடிவெடுக்கலாம் என்று கூட்டமைப்பு கூறியதாம். அதைச் சம்பந்தப்பட்டவர்கள் ஏற்றுக்கொண்டதால் இன்று படம் வெளியாகியிருக்கிறது. ஆனால் தயாரிப்பாளர் தரப்பு விஷாலின் மேல் வைத்திருக்கும் கால்ஷீட் குளருபடி குற்றச்சாட்டுகளால் பணத்தை அவர்தான் கட்டவேண்டிய நிலை ஏற்படும் என்கிறார்கள்.

click me!