நடிகை கீர்த்தி சுரேஷ் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குடன், தனியார் பேங்க் ஒன்றில் விளம்பரத்தில் ஸ்டண்ட் சாகசங்களுடன் நடித்து மிரள வைத்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், என மூன்று மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாகவும், தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தையும் உருவாக்கியுள்ள நடிகை கீர்த்தி சுரேஷ், விரைவில் பாலிவுட் திரையுலகிலும் காலடி எடுத்து வைப்பார் என்பதை உறுதி செய்யும் விதமாகவே தற்போது ரன்வீர் சிங்குடன் விளம்பரப்படத்தில் நடித்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே கடந்த 2020 ஆம் ஆண்டு, 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்புக்கு முன்னர்' நடிகை கீர்த்தி சுரேஷ் பாலிவுட் திரைப்படம் ஒன்றில் நடிக்க கமிட் ஆகி இருப்பதாக செய்திகள் வெளியாகின. பிரபல கால் பந்து கோச்சான Syed Abdul Rahim என்பவற்றின் வாழ்க்கை வரலாற்று படமாக எடுக்கப்பட்ட 'மைதான்' என்கிற படத்தில் தான் கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். இந்த படத்தில் அஜய் தேவகனுக்கு ஜோடியாக இவர் நடிக்க இருந்த நிலையில் பின்னர் ஒரு சில காரணங்களால் அந்த படத்தில் இருந்து விலகினார். கீர்த்தி சுரேஷுக்கு பதில், நடிகை பிரியா மணி நடித்தது குறிப்பிடத்தக்கது.
சினிமா பாணியில் ஸ்கெச் போட்டு... கத்தி முனையில் கடத்தப்பட்ட ராப் பாடகர்..! அதிர்ச்சி பின்னணி..!
அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் செட் ஆகவில்லை என்பதால் இப்படத்தில் இருந்து விலகியதாக ஒரு தகவல் வெளியான நிலையில், 'அண்ணாத்த' படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தங்கையாக நடிக்க வேண்டும் என்பதற்காக தான் இப்படத்தில் இருந்து விலகியதாகவும் கூறப்பட்டது. மேலும் இந்த படத்தை போனி கபூர் தயாரித்த நிலையில், சில நாட்கள் மும்பையில் இருந்த கீர்த்தி, பின்னர் விலகியதாகவும் அறிவித்தார்.
இந்த படத்தில் இருந்து விலகிய பின்னர், அடுத்தடுத்து தென்னிந்திய மொழி படங்களில் கவனம் செலுத்தி வந்த கீர்த்தி சுரேஷ், தற்போது விளம்பர படம் ஒன்றில் பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குடன் நடித்துள்ளார். அதிலும் ஸ்டண்ட் சாகசங்களுடன் நடித்து பார்பவர்களையே மிரள வைர்த்துள்ளார். இதுகுறித்த வீடியோவை அவரே தன்னுடைய, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட ரசிகர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து வருகிறார்கள்.
எனினும் விரைவில் கீர்த்தி சுரேஷின் பாலிவுட் என்ட்ரியை உறுதி செய்யும் விதமாகவே தற்போது பிரபல ஹிந்தி நடிகர் ரன்வீர் சிங்குடன் இணைந்து, இந்த விளம்பரத்தில் நநடித்துள்ளதாக பார்க்கப்படுகிறது.