’கழுகு 2’ க்ளைமேக்ஸைப் பார்த்து விநியோகஸ்தர்கள் கண் கலங்கினார்களாம்...

Published : Jul 25, 2019, 11:17 AM IST
’கழுகு 2’ க்ளைமேக்ஸைப் பார்த்து விநியோகஸ்தர்கள் கண் கலங்கினார்களாம்...

சுருக்கம்

’கழுகு 2’படத்தின் க்ளைமேக்ஸப் பார்த்து விநியோகஸ்தர்கள் கண் கலங்கியதாகவும், இப்பட ரிலீஸுக்குப் பின் கிருஷ்ணா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பட்டியலில் இடம் பிடிப்பார் என்றும் அப்பட இயக்குநர் சத்ய சிவா தெரிவித்துள்ளார்.

’கழுகு 2’படத்தின் க்ளைமேக்ஸப் பார்த்து விநியோகஸ்தர்கள் கண் கலங்கியதாகவும், இப்பட ரிலீஸுக்குப் பின் கிருஷ்ணா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பட்டியலில் இடம் பிடிப்பார் என்றும் அப்பட இயக்குநர் சத்ய சிவா தெரிவித்துள்ளார்.

கடந்த 2012ல் கிருஷ்ணா, பிந்து மாதவி நடிப்பில் சத்யசிவா இயக்கத்தில் வெளியாகி சுமாரான  வெற்றி பெற்ற படம் ‘கழுகு’.அடுத்து இதே இயக்குநர் இயக்கிய ‘சவாலே சமாளி’, ‘சிவப்பு’ ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்நிலையில் சரியாக  ஏழு வருடங்களுக்கு பிறகு தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமாக இதே கூட்டணியில் 'கழுகு 2’ படம் உருவாகியுள்ளது. மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் சார்பில் சிங்காரவேலன் தயாரித்துள்ள இந்தப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் நிறுவனம்  வெளியிடுகிறது. வரும் ஆகஸ்ட்-1ஆம் தேதி இந்த படம் ரிலீசாக இருக்கிறது.இந்த படத்தில் காளிவெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்ய, கோபிகிருஷ்ணா படத்தொகுப்பை கவனிக்கிறார்.

இதையடுத்து இந்த படத்தின் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று இரவு இந்த திரைப்படம் விநியோகஸ்தர்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டது.. த்ரில் நிறைந்த இந்த திரைப்படத்தை ரசித்துப் பார்த்த விநியோகஸ்தர்கள், யாருமே எதிர்பாராத விதமாக அமைக்கப்பட்டுள்ள கிளைமாக்ஸை பார்த்து கண்கலங்கினார்கள்.. இதில் உணர்ச்சிவசப்பட்ட கோவை விநியோகஸ்தர் சிதம்பரம், கோவை ஏரியா வெளியீட்டு உரிமையை அவுட் ரேட் முறையில் வாங்கியுள்ளார்’ என்று கூறும் இயக்குநர் சத்யசிவா, இவ்வளவு காலமும் தனக்கென்று ஒரு தனி அடையாளம் இல்லாமல் தவிக்கும் கிருஷ்ணா இப்படம் மூலம் கண்டிப்பாக அடுத்த கட்டத்துக்கு நகர்வார் என்கிறார்.

கழுகு படத்தில் கொடைக்கானல் மலைப்பகுதியில் தற்கொலை செய்து கொள்பவர்களில் பிணங்களை உயிரைப் பணயம் வைத்து மீட்டெடுக்கும் தொழிலாளி கதாபாத்திரத்தில் நடித்த கிருஷ்ணா, கழுகு 2 படத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் மக்களுக்கு இடையூறு செய்யும் ஆபத்தான மிருகமான காட்டு  நாய்களை வேட்டையாடும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நான் அவள் இல்லை... காட்டுத்தீ போல் பரவிய ஏஐ போட்டோ - கடும் கோபத்தில் நிவேதா தாமஸ் வெளியிட்ட பதிவு
சோலி முடிஞ்சது... ஜனனியின் பிசினஸுக்கு செக் வைத்த ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்