முத்தையா முரளிதரனிடம் கிரிக்கெட் பயிற்சி எடுக்கப்போகும் விஜய் சேதுபதி...

Published : Jul 25, 2019, 10:30 AM IST
முத்தையா முரளிதரனிடம் கிரிக்கெட் பயிற்சி எடுக்கப்போகும் விஜய் சேதுபதி...

சுருக்கம்

உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகக் கருதப்படும் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை திரைப்படமாகிறது என்று யூகமான செய்திகள் சில தினங்களாக நடமாடிவந்த நிலையில் அந்த செய்தியை விஜய் சேதுபதி, முத்தையா முரளிதரன், தயாரிப்பு நிறுவனம் ஆகிய மூவருமே உறுதி செய்துள்ளனர்..இப்படத்தை தார் மோஷன் பிக்சர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது.முத்தையா முரளிதரன் ஆக விஜய்சேதுபதி நடிக்க உள்ளார்.

உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகக் கருதப்படும் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை திரைப்படமாகிறது என்று யூகமான செய்திகள் சில தினங்களாக நடமாடிவந்த நிலையில் அந்த செய்தியை விஜய் சேதுபதி, முத்தையா முரளிதரன், தயாரிப்பு நிறுவனம் ஆகிய மூவருமே உறுதி செய்துள்ளனர்..இப்படத்தை தார் மோஷன் பிக்சர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது.முத்தையா முரளிதரன் ஆக விஜய்சேதுபதி நடிக்க உள்ளார்.

இப்படத்தைப் பற்றி தயாரிப்பு நிறுவனமான தார் கூறுவதாவது,...உலகின் மிகச்சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையையும் காலங்களையும் வெள்ளித்திரைக்குக் கொண்டுவருவதில் நாங்கள் பெருமிதமும் பெருமகிழ்ச்சியும் அடைகிறோம்.இப்படத்தை உலகெங்கும் உள்ள ரசிகர்களுக்கு எடுத்து செல்லவிருக்கிறோம். தென்னிந்தியாவின் மிகப் பிரபலமான நடிகரான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்கள் முத்தையா முரளிதரனின் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க உள்ளார்.

’800’என்று பெயரிடப்படவிருக்கும் இப்படத்தை எம் எஸ் ஸ்ரீபதி இப்படத்தை எழுதி இயக்க உள்ளார். தமிழில் உருவாகும் இப்படம், உலகின் பல மொழிகளில் வெளியிடப்பட இருக்கிறது.ஒரு பிரபல தென்னிந்திய தயாரிப்பு நிறுவனத்துடன் நாங்கள் இணைந்து இப்படத்திற்காக பணியாற்றி கொண்டிருக்கிறோம். இதை பற்றிய அதிகார அறிவிப்பு வெகு விரைவில் வெளியிட உள்ளோம்’என்று தெரிவித்துள்ளனர்.

இப்படத்தைப் பற்றி முத்தையா முரளிதரன் கூறுகையில்,’எனது வாழ்வின் கதையைப் படமாகத் தயாரிக்கும் தார் மோஷன் பிக்சர்ஸ் உடன் சேர்ந்து பணியாற்றுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.இப்படத்தை 2020 ஆம் ஆண்டின் கடைசியில் வெளியிட நாங்கள் எண்ணி இருக்கிறோம்.மக்கள் செல்வன் விஜய் சேதுபதி போன்ற ஒரு சிறந்த கலைஞர் என்னுடைய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கப் போவதை நான் பெரும் கௌரவமாக கருதுகிறேன்.நான் இந்தப் படத்தின் குழுவோடு பல மாதங்களாக இணைந்து பணியாற்றி வருகிறேன். இனிமேலும் என்ன ஒத்துழைப்பு தேவையோ, அதை நான் இப்படத்துக்கு அளிப்பேன் என்றார்.

இப்படத்தைப் பற்றி விஜய் சேதுபதி கூறுகையில்,’ முத்தையா முரளிதரனின் வாழ்க்கைக் கதையைக் கூறும் இப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். சிறந்த தமிழ் விளையாட்டு வீரர்களின் ஒரு சின்னமாகத் திகழும் முத்தையா முரளிதரன், உலகெங்கும் தன் திறமையை நிரூபித்துள்ளார்.முரளியின் கதாபாத்திரம் எனக்கு சவாலாகவே இருக்கப் போகிறது. இந்த சவாலை நான் ஆவலோடு எதிர் கொள்ளக் காத்திருக்கிறேன். முரளி அவர்களே எங்களுடன் இப்படத்தில் பணியாற்றுவார் என்பதை அறிந்தும் அவர் தாமே எங்களுக்கு கிரிக்கெட் விளையாட்டின் நுட்பங்களைப் பற்றி அறிவுரை வழங்குவார் என்பதை அறிந்தும் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.என் மீது நம்பிக்கை வைத்து இந்தக் கதாபாத்திரத்தை எனக்கு வழங்கிய இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களுக்கும் முரளி அவர்களுக்கும் நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்’ என்றார்.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கொங்குநாட்டை அதிரவிட்ட விஜய்... ஈரோட்டில் தளபதி எடுத்த மாஸ் செல்பி வீடியோ வைரல்
தன்னோட வாழ்க்கைக்கே வழிய காணோம்; இதுல தங்கச்சிக்கு அட்வைஸ் பண்ணும் தங்கமயில்