அழகிய குழந்தையை பெற்றெடுத்த காவ்யா மாதவன்! குவியும் வாழ்த்து!

Published : Oct 19, 2018, 05:53 PM IST
அழகிய குழந்தையை பெற்றெடுத்த காவ்யா மாதவன்! குவியும் வாழ்த்து!

சுருக்கம்

பிரபல நடிகை காவ்யா மாதவன் முதல் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற பின் பிரபல நடிகர் திலீப்பை பல்வேறு சர்ச்சைகளுக்கு பின் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தற்போது இவருக்கு அழகிய குழந்தை பிறந்துள்ளது என்பதை அவருடைய கணவர் திலீப் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதை தொடர்ந்து காவ்யா மாதவனுக்கு பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

மஞ்சு வாரியார் மற்றும் திலீப் இருவரும் கணவன் மனைவியாக வாழ்த்து கொண்டிருக்கும் போதே... காவியா மாதவன் மற்றும் திலீப் பற்றிய காதல் கிசுகிசுக்கள் மலையாள திரையுலகத்தை வட்டமிட்டது. அப்போது இது போல் வெளியான தகவல்களை இருவருமே மறுத்து வந்தனர்.

இவர்களின் ரகசிய காதல் குறித்து பிரபல நடிகை திலீப்பின் முதல் மனைவி நடிகை மஞ்சு வாரியரிடம் போட்டு கொடுத்ததால் தான், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, விவாகரத்து வாங்கியதாகவும் கூறப்பட்டது. மேலும் இதற்காக போட்டு கொடுத்த பிரபல நடிகையை பழி வாங்க சில சம்பவங்களை அரங்கேற்றி சர்ச்சையில் சிக்கி, கைது செய்யப்பட்டார் திலீப்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, கடந்த 2016 ஆண்டு நடிகை காவ்யா மாதவனை மகள் மீனாட்சி கண் முன்பே திருமணம் செய்து கொண்டார் திலீப். திருமணத்திற்கு பின் முழுமையாக திரையுலகை விட்டு விலகிய நடிகை காவ்யா மாதவன்  குடும்பத்தை கவனிப்பதில் கவனம் செலுத்தினார். 

இந்நிலையில் இன்று காலை 4 : 45 மணிக்கு கொச்சியில் உள்ள பிரபல தனியார் மருத்துவ மனையில் அழகிய பெண் குழந்தை இவருக்கு பிறந்துள்ளது. இதனை நடிகர் திலீப் தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் காவியா மாதவன் ரசிகர்கள் இவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி