“பக்குவப்பட்டவர்கள் பதற்றமுறுவதில்லை”... நடிகர் சூர்யாவை பாராட்டி தள்ளிய வைரமுத்து எதற்கு தெரியுமா?

By Kanimozhi PannerselvamFirst Published Aug 12, 2020, 1:03 PM IST
Highlights

சூர்யாவின் இந்த அணுகுமுறையை பாராட்டி கவிப்பேரரசு வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

தன்னைத் தானே சூப்பர் மாடல் என சொல்லிக்கொள்ளும் மீரா மிதுன் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களாக திரையுலகில் நுழைந்து இன்று முன்னணி நடிகராக இருக்கும், விஜய் மற்றும் சூர்யா குறித்து விமர்சித்து பேசி வருகிறார். லாக்டவுன் நேரத்தில் விளம்பரத்திற்காக பேசி வருகிறார் என முதலில் யாரும் இவரை கண்டுகொள்ளாமல் இருந்தனர். ஆனால் மீரா மிதுனின் அட்டகாசம் அதிகமாகி போய், சூர்யாவிற்கு நடிப்பு என்ற வார்த்தைக்கு ஸ்பெல்லிங் கூட தெரியாது என வரம்பு மீறி பேசி ரசிகர்களை ஆத்திரத்தை அதிகரித்தார். இதனால் கடுப்பான ரசிகர்கள் மீரா மிதுனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக விஜய் - சூர்யா ரசிகர்கள் பச்சை பச்சையாய் திட்டி கமெண்ட் போட ஆரம்பித்தனர். 

வாயால் சொல்ல முடியாத அளவிற்கு அர்ச்சனைகளை வாங்கினாலும் மீரா மிதுன் அடங்கியதாக தெரியவில்லை. என்னை இப்படி கெட்ட, கெட்ட வார்த்தைகளில் திட்டுறீங்களே... விஜய் பொண்டாட்டி சங்கீதாவைவும், சூர்யா பொண்டாட்டி ஜோதிகாவையும் அந்த வார்த்தைகளை சொல்லி நான் கூப்பிட்டால்  சும்மா இருப்பீங்களா? என எல்லை மீறி அசிங்கமாக பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதனால் கொதிப்பதிடைந்த விஜய், சூர்யா ரசிகர்கள் மீரா மிதுனை விளாசிக்கொண்டிருக்கிறார்கள். சில விஜய் ரசிகர்கள் மீரா மிதுனை திட்டி வீடியோ வெளியிட்டு வருகின்றனர். 

முதலில் மீரா மிதுனின் பக்குவமில்லாத பேச்சை யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால்  சம்பந்தப்பட்ட நடிகர்களின் குடும்பத்தினரையும் சேர்த்து கொச்சைப்படுத்தும் வகையில் மீரா மிதுனின் செயல் நீண்டது ரசிகர்களை தாண்டி திரைத்துறையினரையும் கடுப்படைய செய்தது. மீரா மிதுனின் செயலை கண்டிக்கும் விதமாக இயக்குநர் பாராதிராஜா அறிக்கை வெளியிட்டிருந்தார். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், தனது ரசிகர்கள் தொடர்ந்து மீரா மிதுன் விவகாரத்தில் கொதிப்படைந்துள்ளதை சரி செய்யும் விதமாகவும் நடிகர் சூர்யா நேற்று  ட்வீட் ஒன்றை பதிவு செய்திருந்தார்.

 

இதையும் படிங்க: இடை தெரிய கவர்ச்சி உடை... தீயாய் பரவும் சீரியல் நடிகை ஷிவானியின் பெல்லி டான்ஸ் வீடியோ...!

அதில், "எனது தம்பி தங்கைகளின் நேரமும், சக்தியும் ஆக்கப்பூர்வமான செயல்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதே என் விருப்பம். இயக்குனர் இமயம் திருமிகு. பாரதிராஜா அவர்களுக்கு என் உளப்பூர்வமான நன்றிகள்.. " என பதிவிட்டிருந்தார். அத்துடன் 2018ம் ஆண்டு பதிவிட்ட, "தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற" என்ற ட்வீட் மூலம் தனது ரசிகர்களுக்கு அறிவுரை கூறினார். இதனை பெரும்பாலான சூர்யா ரசிகர்கள் ஏற்றுக்கொண்டு செயல்பட ஆரம்பித்துவிட்டனர். 

 

இதையும் படிங்க: நடிகர் சஞ்சய் தத்திற்கு நுரையீரல் புற்றுநோய்... சிகிச்சைக்காக அமெரிக்கா பயணம்..!

சூர்யாவின் இந்த அணுகுமுறையை பாராட்டி கவிப்பேரரசு வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சுமத்தப்பட்ட பழியின் மீது சூர்யாவின் அணுகுமுறை நன்று. பக்குவப்பட்டவர்கள் பதற்றமுறுவதில்லை; பாராட்டுகிறேன். நதியோடு போகும் நுரையோடு கரை கைகலப்பதில்லை என கவிதை நாடு வாழ்த்தியுள்ளார். 

சுமத்தப்பட்ட பழியின்மீது
சூர்யாவின் அணுகுமுறை நன்று.
பக்குவப்பட்டவர்கள்
பதற்றமுறுவதில்லை;
பாராட்டுகிறேன்.
நதியோடு போகும் நுரையோடு
கரை கைகலப்பதில்லை.

— வைரமுத்து (@Vairamuthu)
click me!