
நடிகை கஸ்தூரி எப்போதும் பாரபட்சம் இன்றி, தன்னுடைய மனதில் தோன்றும் கருத்துக்களை கூறி அரசியல் வாதிகள் முதல் சமூக அக்கறை கொண்ட விஷயம் வரை விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் தற்போது ட்விட்டரில் பகிர்ந்துள்ள விஷயம், இப்படியும் நடக்குமா? என பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளது என்னவென்றால்... பிரபல தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர், மழையில் நனைத்த உடையுடன் லிப்டில் சென்றுள்ளார். அப்போது அந்த மாணவியுடன் கல்லூரியில் பணியாற்றும் ஊழியர் ஒருவரும் இருந்துள்ளார்.
திடீர் என அந்த மாணவி கண் முன்பே அந்த ஊழியர், உடைகளை அவிழ்த்து சுய இன்பத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, இந்த பிரச்னையை உரிய கல்லூரியின் ஹாஸ்டல் வார்டன் பார்வைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் அந்த வார்டன் இந்த பிரச்னையை உதாசீன படுத்தியதோடு. மாணவிகள் இது போன்ற ஆடை அணிவதால் தான் இது போன்ற சம்பவங்கள் அரங்கேறுவதாக கூறியுள்ளார்.
இதனால் அந்த கல்லூரி மாணவிகள் ஒன்று கூடி கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த தகவலை தான் கஸ்தூரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறி கோவத்தில் கொந்தளித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.