“பல் இருக்கிறவன் பக்கோடா திங்கிறான்”... மீரா மிதுனை சரமாரியாக விளாசிய கஸ்தூரி...!

By Kanimozhi PannerselvamFirst Published Aug 11, 2020, 5:11 PM IST
Highlights

சிவாஜி சார் நிழலில் இருந்து வெளியே வர நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் என பிரபு சாரே என்னிடம் சொல்லியிருக்கார்.

தன்னைத் தானே சூப்பர் மாடல் என்று சொல்லி வந்த மீரா மிதுனின் ஆட்டம் தற்போது அதிகரித்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற தன் மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமான மீரா மிதுனுக்கு பட வாய்ப்புகள் பெரிதாக அமையவில்லை. அதன் பின்னர் அனைத்து விதமான கவர்ச்சி போட்டோ ஷூட்களையும் எடுத்து, ஹாட் போட்டோஸை தட்டிவிட்டும் பார்த்தார் யாரும் கண்டுகொள்ளவில்லை. இதனால் கடுப்பாகி சென்னையைக் காலி செய்த மீரா மிதுன், தற்போது மும்பையில் வசித்து வருகிறார். 

அங்கு போயும் அடங்க மாட்டேன் என்று கோலிவுட் நடிகர்கள் குறித்து தாறுமாறாக அவதூறு பரப்பி வருகிறார். பாலிவுட் நடிகர் சுஷாந்த் தற்கொலைக்குப் பிறகு நெபோடிசம் என்ற வார்த்தை பிரபலமாகி வருகிறது. அதை கையில் எடுத்த மீரா மிதுன் வாரிசு நடிகர்களைப் பற்றியும், அவரது குடும்பத்தினர் பற்றியும் தாறுமாறாக பேசி வருகிறார். தற்போது நடிகர்கள் விஜய், சூர்யா குறித்து வரம்பு மீறி பேசி வரும் மீரா மிதுனை திரைத்துறையினர் பலரும் கண்டித்து வருகின்றனர். 

தற்போது நடிகை கஸ்தூரி தனது யூ-டியூப் சேனலில் மீரா மிதுனை கண்டபடி கழுவி ஊற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நடிப்புக்கு ஸ்பெல்லிங் கூட தெரியாதவங்க எல்லாம் அப்பாவுடைய பெயரை வச்சி முன்னுக்கு வந்துடுறாங்கன்னு சூப்பர் மாடல் சொல்லிக்கிட்டு இருக்காங்க. மும்பையில் எப்படியோ தெரியாது, ஆனால் தமிழ் சினிமாவில் திறமைக்கு மட்டுமே மரியாதை. திறமை இல்லாதவர்களை யாராலும் முன்னுக்கு கொண்டு வர முடியாது. 

நெபோடிசம், குரூபிசம் தமிழ் திரையுலகில் செல்லாது. மேலிடத்து சிபாரிசு, மேலிடத்து ஆள் என்பதால் மட்டுமே திறமையே இல்லாதவர்களுக்கு பதவி, பரிசு எல்லாம் தேடி வருவது அரசியலில் நடக்கலாம், கவர்ன்மென்ட்டில் நடக்கலாம், கம்பெனியில நடக்கலாம், ஏன் படிப்பில் கூட நடக்கலாம். ஆனால் தமிழ் சினிமாவில் ரொம்ப, ரொம்ப வாய்ப்பு இல்ல. எங்களுக்கு மேலிடம் மக்கள் தான், மக்கள் வரவேற்பு கொடுக்கவில்லை என்றால் எந்த கொம்பனோட மகனாக இருந்தாலும் ஜெயிக்க முடியாது. மக்கள் நினைத்தால் மட்டுமே பிரபலமாக முடியும். அதிலும் தமிழ் ரசிகர்களிடம் பெயர் வாங்குவது சாதாரண காரியம் கிடையாது. திறமை வேணும், பொறுமை வேணும், கொஞ்சம் அதிர்ஷ்டமும் வேணும், திறமை இல்லாமல் லான்ச் படம் பண்ணலாம். ஆனால் அதை பார்த்து மக்கள் ஏற்கவில்லை என்றால் அப்பாவே அடுத்த பட வாய்ப்பு கொடுக்க மாட்டார்.


சினிமா பின்னணியில் இருந்து வருபவர்கள் ஜெயிக்கிறாங்கிறது எவ்வளவு உண்மையோ, சினிமா குடும்பத்தில் இருந்து வர்றாவங்களுக்கு தோல்வியை சகித்து கொள்கிற உறுதி தேவை. ஏனென்றால் தமிழ் சினிமாவை பொறுத்த வரை சாதாரணமாக நடிக்க வருபவர்களை கூட நல்ல ஊக்குவிப்பார்கள். ஆனால் சினிமா குடும்பத்தில் இருந்து வந்துட்டா அவ்வளவு பெரிய அப்பாவுக்கு இப்படி ஒரு மகனா, மகளானு டக்குனு சொல்லிடுவாங்க. என்ன ஒரு பிரஷர் அது.

சிவாஜி சார் நிழலில் இருந்து வெளியே வர நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் என பிரபு சாரே என்னிடம் சொல்லியிருக்கார். சிவாஜி மகன், முத்துராமன் மகன், இளையராஜா மகன் என்பது வரம் கிடையாதுங்க, அது ஒரு சவால். ராஜா சாரை மீறி ஒரு மியூசிக் போட முடியுமா? அப்படி பார்த்தால் விஜயகுமார் சார் வீட்டில் இருந்து தானே அனைவரும் பெரிய ஹீரோயின்களாகியிருக்கணும். அருண் விஜய் பெரிய நடிகரின் மகன் என்பதால் வெற்றி தேடி வந்ததா. எத்தனை விதமான கேரக்டர் பண்ணியிருக்கார் கடைசியில் வில்லன் ரோல் வரைக்கும் செஞ்சி அவரின் விடா முயற்சிக்கும், திறமைக்கும், நம்பிக்கைக்கும் கிடைத்தது தான் இன்று அவர் அடைந்த வெற்றி. ஹரி சார் அவங்க வீட்டு மாப்பிள்ளை. அவர் அருண் விஜய்யை வைத்து தான் படம் எடுத்திருந்திருக்க வேண்டும். ஹரி சார் அவங்க வீட்டு பிள்ளையை வச்சி படம் எடுக்காமல், சிவக்குமார் சார் பிள்ளையை வைத்து தானே படம் எடுக்கிறார்.வியாபாரத்தையும், மக்கள் விருப்பத்தையும் தான் பார்ப்பார்கள். 

டாக்டர் குடும்பத்து பிள்ளைகள் டாக்ராவது போல், அரசியல்வாதி பிள்ளைகள் அரசியலுக்கு வருவது போல், வக்கீல் பசங்க வக்கீல் ஆகுற மாதிரி. ஒரு சினிமா குடும்பத்தில் பிறந்த குழந்தைகளின் ரத்தத்திலேயே கலந்திருக்காதா?. தமிழ் சினிமாவை பொறுத்தவரை யாரும் தூக்கிவிட முடியாது. பணம் இருக்கிறவன் பக்கோட திக்குறான். விளம்பரத்தில் நடிக்க கூட அந்த நிறுவனத்தை சேர்ந்த முதலாளிகளே வரும் போது, பணம் இருக்குற புரோடியூசர், இயக்குநர் அவங்க பசங்களை ஏன் புரோமோட் பண்ணக்கூடாது என கேள்வி எழுப்பியுள்ளார். 
 

click me!