படைப்பாளியாகவும்... போராளியாகவும்... ஆட்சியாளராகவும் திகழ்ந்தவர் கலைஞர்; புகழாரம் சூட்டிய வைரமுத்து!!!

By vinoth kumarFirst Published Aug 8, 2018, 9:04 AM IST
Highlights

திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு கண்ணீர் மல்க கவிஞர் வைரமுத்து நேரில் அஞ்சலி செலுத்தினார். பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வைரமுத்து கருணாநிதிக்கு புகழாரம் சூட்டியுள்ளார். 

திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு கண்ணீர் மல்க கவிஞர் வைரமுத்து நேரில் அஞ்சலி செலுத்தினார். பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வைரமுத்து கருணாநிதிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.  

தமிழ்ப்போராளி, கட்சி தலைவர், ஆட்சியாளர் கவியரங்க தலைவர் மறைந்துவிட்டார் என கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார். கலைஞர் 94 வயதானவர் என்றாலும் அவரது மறைவு பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றார். மாபெரும் கட்சி திமுகவுக்கு 50 ஆண்டுகள் கலைஞர் தலைவராக இருந்தார். 

எளிய குடும்பத்தில் பிறந்த கலைஞர் பல்கலைக்கழகங்களை உருவாக்கினார். படைப்பாளியாகவும் போராளியாகவும் ஆட்சியாளராகவும் கலைஞர் திகழ்ந்தவர் என புகழாரம் சூட்டியுள்ளார். 35 ஆண்டுகள் தினமும் கலைஞருடன் தொலைபேசியில் பேசி இருக்கிறேன். கலைஞர் எழுதிய நூல்கள் அவரை விட உயரமானதாக இருக்கும் என்றார். மரணத்தால் கலைஞர் அவர்கள் இன்னும் உணரப்படுவார் என்று வைரமுத்து உருக்கமாக பேசியுள்ளார். 

click me!