கார்த்திக் சுப்புராஜின் அப்பா இவ்வளவு வெறிபிடித்த ரசிகரா? ரஜினிக்காக இப்படியெல்லாம் செய்தாரா?

Published : Jan 15, 2019, 11:10 AM IST
கார்த்திக் சுப்புராஜின் அப்பா இவ்வளவு வெறிபிடித்த ரசிகரா? ரஜினிக்காக இப்படியெல்லாம் செய்தாரா?

சுருக்கம்

ரஜினிக்காக ஒரு ஒரு ஷோ எடுத்து உறவினர்களுக்கு காண்பித்தேன் என பேட்ட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் தந்தை எஸ்.பி .கனகராஜ் என ரஜினியை பற்றி கூறியுள்ளார்.

‘பேட்ட’ படத்தில் ரஜினியோடு நடித்திருக்கும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தந்தை எஸ்.பி.கஜராஜ் ரஜினி ரசிகர். இவர் ஏற்கனவே ‘கபாலி’யிலும் நடித்திருக்கிறார். 

ரஜினி சாரோடு நடிப்பதென்பது, இறைவன் அருள் என்றுதான் சொல்ல வேண்டும். ஏன்னா எவ்வளவோ பேர் சினிமாவுக்கு வர்றாங்க. அப்படி வர்றவங்களுக்கு ரஜினி சாருடன் ஒரு படமாவது பண்ணமாட்டோமா என்ற ஏக்கம் இருக்கும்.  அந்த ஏக்கத்தை ‘கபாலி’யை தொடர்ந்து இரண்டாவது வாய்ப்பாக சூப்பர்ஸ்டாரோடு ‘பேட்ட’ வாய்ப்பு கிடைத்தது.

இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்த மிகப் பெரிய கிஃப்ட். ஏற்கனவே என் மகன் இயக்கத்தில் ‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’ படங்களில் நடித்திருந்தாலும் ரஜினி சாரை வைத்து இயக்கும் படத்தில் நடிப்பது கூடுதல் மகிழ்ச்சி” என்று கூறினார். “ரஜினி சாருக்கு நான் ரசிகன் என்றால் என் பையன் வெறியன். கார்த்திக் சிறுவனாக இருந்த சமயத்திலிருந்து அவனுக்கு ரஜினி படம் தான் காண்பிப்பேன் என்றார்.

மேலும், தலைவர் படம் என்றால் குறைந்தது ஐந்து முறையாவது பார்த்துவிடுவேன். முதல் முறை நண்பர்களுடன் பார்ப்பேன். பிறகு என் குடும்பத்துடன் பார்ப்பேன். பிறகு எப்போதெல்லாம் நேரம்  கிடைக்கிறதோ அப்போதெல்லாம் பார்ப்பேன். கடைசியா தியேட்டரை விட்டு படம் எப்போது எடுக்கிறார்களோ அது வரை பார்ப்பேன் எனக் கூறினார். ஒருமுறை ‘தங்க மகன்’ படம் ஓடும்போது தியேட்டரில் ஒரு ஷோ எடுத்து உறவினர்களுக்கு காட்டினேன் என தான் எவ்வளவு பெரிய ரசிகன் என வெளிப்படுத்தியுள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கார்த்திகை தீபம் அப்டேட்: அம்மாவுக்காக கருவை கலைக்கத் துணிந்த ரோகிணி! கார்த்திக்கிடம் சிக்கிய உண்மை - விறுவிறுப்பான எபிசோட்!
அரிசி வாங்கக் கூட காசு இல்ல; இன்று கோடிகளில் சொத்து! வறுமையை வென்று சாதித்த நடிகர் சிங்கமுத்துவின் வாழ்க்கை கதை!