
அண்ணன் தம்பிகள் பாசம், அண்ணன் தங்கை, நண்பன் துரோகம் மனைவி பாசம் என பார்க்க வைத்த அஜித் சிவா கூட்டணி, தந்தை மகள் பாசத்தை மையமாக வைத்து அஜித்துடன் நான்காவது முறையாக ரசிகர்கள் படத்தை ஒரு திருவிழாபோல கொண்டாடிவருகின்றனர். தந்தைக்கும் மகளுக்கும் பாசக் கதை என்பதால், குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு படையெடுக்கின்றனர். அதுமட்டுமா? படம் பார்ப்பார்த்தவர்கள் வீடியோவாகவும், போட்டோவும் பதிவிட்டு தங்களின் உணர்வை வெளிப்படுத்தி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பொதுவான சினிமா ரசிகர் ஒருவர் தனது பெண் குழந்தையுடன் தியேட்டரில் படம் பார்த்த சமயத்தில் க்ளைமேக்ஸ் சீனில் தந்து பெண்குழந்தை அழுத வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவை விஸ்வாசம் படம் தயாரித்த சத்யஜோதி ஃபிலிம்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளது, அதில், ` க்ளைமாக்ஸ் காட்சிகள் அனைத்து தரப்பு ஆடியன்ஸ்களிடமிருந்தும் ஒருமித்த உணர்வுகளைப் பிரதிபலிக்கிறது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. விஸ்வாசம் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி நிறைவடைந்து அனைவரும் திரையரங்கை விட்டு வெளியேறிக் கொண்டிருந்த போது, அந்த ரசிகர் ஒருவர் கதறிக் அழும் தன் மகளை தன் தோளில் சாய்த்துக் கொள்கிறார்.
தேம்பி அழும் மகளை ஏந்தியபடியே அந்த ரசிகர், `விஸ்வாசம் பாத்துட்டு என் பாப்பா அழுகுறா... சூப்பர் படம்' என்று கூறும் வீடியோ. `இப்படி எல்லாரையும் அழ வைச்சிட்டீங்களே!' கேட்க்கிறார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் வெளியிட்ட அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.