இன்னும் எத்தனை படம் நடித்தாலும் நான் தல ரசிகன் தான்... தூக்குதுரை பங்காளி ரோபோ ஷங்கர் ஹேப்பி!!

Published : Jan 14, 2019, 09:43 PM IST
இன்னும் எத்தனை படம் நடித்தாலும் நான் தல ரசிகன் தான்... தூக்குதுரை பங்காளி ரோபோ ஷங்கர் ஹேப்பி!!

சுருக்கம்

என்ன ஒரு கொண்டாட்டம், என்ன ஒரு உற்சாகம், இந்த பிரமாண்ட வெற்றிக்கு காரணமான அஜித் சார் எந்த சலனமும் இல்லாமல் அமைதியாக இருப்பது, அவர் மேல் இருந்த மரியாதையை கூடுகிறது. 

பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகி வசூலில் சக்கைப்போடு போட்டுவரும் விஸ்வாசம் படம் வெளி வந்த நாளில் இருந்தே அஜித்தின் ரசிகர்களையும், பேமிலி ஆடியன்ஸையும் ரசிக்க வைத்துள்ளது. அதிலும்  குறிப்பாக பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள், பெண் பிள்ளைகளை பெற்ற அப்பாக்கள் என அனைவரையும் ரசிக்கும் அளவிற்கு மெகா ஹிட் அடித்துள்ளது. இந்த படத்தில் அஜீத்தின் பங்காளியாக வந்து “மெரட்டு” என்கிற பாத்திரத்தில் பட்டையைக் கிளப்பிய ரோபோ ஷங்கர்  தல அஜித்தைப் பற்றி எக்கச்சக்கமாக புகழ்ந்துள்ளார்.

தல அஜித்தை  முதல் முறையாக படப்பிடிப்பு தளத்தில் கேரவனில் சந்தித்தேன். என்னையும், என்னுடைய குடுமத்தைப் பற்றியும்  நிறைய பேசினார். நான் ஒரு ரசிகனாக அவர் ஒரு வருடத்தில் இரண்டு படமாகவது நடிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டேன். புன்னகையோடு ஆமோதித்தார் நம்ம தல. நான் விஸ்வாசம் ரிலீஸ் ஆன அன்று மதுரையில் இருந்தேன். பொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் முன்பே வந்ததை போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது.

என்ன ஒரு கொண்டாட்டம், என்ன ஒரு உற்சாகம், இந்த பிரமாண்ட வெற்றிக்கு காரணமான அஜித் சார் எந்த சலனமும் இல்லாமல் அமைதியாக இருப்பது, அவர் மேல் இருந்த மரியாதையை கூடுகிறது.  இனி நானும் அந்த எளிமையை  கடைப்பிடிக்க வேண்டும் என்று முடிவெடுத்து இருக்கிறேன். நான் அவருடன் இனி எத்தனை படங்கள் நடித்தாலும் எனக்கு ஒரு ரசிகனின் மன நிலை மாறாது. எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்த இயக்குனர் சிவாவுக்கு நன்றி என்கிறார் தூக்கு துரையின் பங்காளி "மெரட்டு" ரோபோ ஷங்கர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஒன் லாஸ்ட் டைம்... ஒரே நாளில் மோதும் விஜய் - அஜித் படங்கள்; என்ன நண்பா தல - தளபதி கிளாஷுக்கு ரெடியா?
ரோகிணி கொடுத்த புகார்... கைதாகும் விஜயா? தீப்பறக்கும் திருப்பங்களுடன் சிறகடிக்க ஆசை