கார்த்திக் மற்றும் கௌதம் கார்த்திக் அப்பா, மகனாக நடிக்கும் படத்தின் தலைப்பு வெளியீடு…

 
Published : Oct 10, 2017, 09:28 AM ISTUpdated : Sep 19, 2018, 01:17 AM IST
கார்த்திக் மற்றும் கௌதம் கார்த்திக் அப்பா, மகனாக நடிக்கும் படத்தின் தலைப்பு வெளியீடு…

சுருக்கம்

Karthik and Gautham Karthik acting in a single movei title released

கார்த்திக் மற்றும் கௌதம் கார்த்திக் இருவரும் இணைந்து அப்பா, மகனாக நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

குடும்பத்தில் இரண்டு நடிகர்கள் இருந்தாலும், இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிப்பது சிரமமான காரியம்தான். அதுவும், கணவன் மற்றும் மனைவி, அப்பா மற்றும் மகன்/மகள் உறவாக இருந்துவிட்டால், ஒன்றாக நடிக்கவே மாட்டார்கள்.

அப்படியே நடித்தாலும், நிஜ உறவைப் போன்ற கதாபாத்திரத்தில் நிச்சயம் நடிக்க மாட்டார்கள். அப்படி தான் இதுவரை தமிழ் சினிமா கண்டுள்ளது.

இதற்குமுன் சிவாஜி மற்றும் பிரபு பல படங்களில் தந்தை மகனாக நடித்துள்ளனர். அதன் பிறகு தற்போது கார்த்தியும், கௌதம் கார்த்தியும் ஒரு படத்தில் அப்பா மகனாக நடிக்க உள்ளனர்.

இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் இந்த படத்தின் தலைப்பும் வெளியிடப்பட்டுள்ளது. ஆம். “மிஸ்டர் சந்திரமௌலி” என்பதுதான் அந்தப் படத்தின் தலைப்பு. எங்கேயே கேட்டதுபோல இருக்கா? இருக்கணுமே. கார்த்திக்கின் ஃபேமஸ் வசனம் தான் அது.

இந்த தலைப்பை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். இப்படத்தை திரு இயக்குகிறார்.  படத்தை தனஞ்செயன் தயாரிக்கிறார்.

படத்தில் கார்த்திக் அரசு அதிகாரியாகவும், கௌதம் கார்த்திக் பாக்ஸராகவும் நடிக்கின்றனர்.

நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த அப்பா மற்றும் மகன் கதையாக உருவாகவுள்ளது. தற்போது கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது.

படப்பிடிப்பு நவம்பர் முதல் வாரத்தில் தொடங்கத் திட்டமிட்டுள்ளனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நானும், ரேவதியும் 6 மாசம் சேர்ந்து இருக்கணும்: கோர்ட் உத்தரவு! சாமுண்டீஸ்வரி, சந்திரகலாவுக்கு ஆப்பு வச்ச கார்த்திக்!
ஜெயிலர் 2-ல் நான் கெஸ்ட் ரோல் இல்லை: சிவண்ணாவின் மர்மப் பேச்சு! முத்துவேல் பாண்டியனுடன் மீண்டும் நரசிம்மா!