
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு முன்பு கமல்ஹாசன் வந்துவிடுவார் என்று நடிகை கஸ்தூரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் நடிகை கஸ்தூரி. அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கஸ்தூரி, “மற்ற மாநிலங்களில் இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டில் சினிமா கட்டணம் ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. இந்த டிக்கெட் கட்டணம் உயர்வு காரணமாக கிட்டத்தட்ட 2000-க்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளானர். இப்போதே படங்களை எடுத்த தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்தில் உள்ளனர்.
எனவே, ஜிஎஸ்டியை வரியைத் தொடர்ந்து விதிக்கப்பட்ட கேளிக்கை வரி உயர்வு தொடர்பாக தமிழக அரசு அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
தற்போது கமல்ஹாசன் தமிழக அரசு குறித்து கருத்து தெரிவித்து வருகிறார். அதோடு நிச்சயமாக அரசிலுக்கு வருவதாகவும் வெளிப்படையாக கூறி வருகிறார். இதற்கு முன்னதாக ஏற்கனவே ரஜினிகாந்த் தன்னுடைய ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும், அவர் அரசியலுக்கு வருவது குறித்து மறைமுகமாக பேசி வருகிறார்.
அரசியல் சர்ச்சை குறித்து இருவரும் விமர்சனம் கொடுப்பது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை அரசியல் பற்றி யாரும் கேள்வி கேட்காத நிலை இருந்தது. ஆனால், இந்த நிலை தற்போது மாற்றங்களை சந்தித்து வருகிறது.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு முன்பு கமல்ஹாசன் வந்துவிடுவார் என்று நம்பிக்கை இருக்கிறது” என்று அவர் பேசினார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.