கார்த்திக் நரேனின் மூன்றாவது படத்தின் பெயர் வெளியானது...!

 
Published : Feb 15, 2018, 07:51 PM ISTUpdated : Sep 19, 2018, 01:57 AM IST
கார்த்திக் நரேனின் மூன்றாவது படத்தின் பெயர் வெளியானது...!

சுருக்கம்

karthick naren third movie name announced

'துருவங்கள் பதினாறு ' இயக்குநர் கார்த்திக் நரேனின்  புதிய படத்தின் பெயர் இன்று 5 மணிக்கு வெளியிடப்பட்டது.

சென்ற ஆண்டில் 100 நாள் ஓடி  மாபெரும் வெற்றிப் படம் 'துருவங்கள் பதினாறு'. இப்படம்  விமர்சன ரீதியிலும்  வசூலிலும் பேசப்பட்ட படம் என்ற பெருமையைப் பெற்றது.

இதனால் இப்படத்தை இயக்கிய கார்த்திக் நரேனின்  அடுத்த படம் பற்றிய எதிர்பார்ப்பு கூடியது. அவர் தனது அடுத்த படமாக 'நரகாசுரனை' இயக்கி உள்ளார் . அரவிந்த்சாமி , ஸ்ரேயா , சந்தீப் கிருஷ்ணா , ஆத்மிகா நடித்துள்ளனர். இதன் இறுதிக்கட்ட தொழில் நுட்பப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன.

இந்நிலையில் தன் மூன்றாவது படத்தின் அறிவிப்பைத் தனது ட்விட்டரில் கார்த்திக் நரேன் இன்று மாலை 5.00 மணிக்கு வெளியிட்டார். படத்தின் பெயர் 'நாடக மேடை ' .இப்படத்தை இயக்கி தன் 'நைட் நாஸ்டால்ஜியா பிலிமோடெய்ன்மெண்ட் ' பட நிறுவனம் சார்பில்  தயாரிக்கிறார்.

ஒளிப்பதிவு - சுஜித் சரங், இசை- ரோன் ஈத்தன் யோகன் , எடிட்டிங் - ஸ்ரீஜித் சரங் , கலை - சிவசங்கர், தயாரிப்பு நிர்வாகம்  - மணிகண்டன் என்று தன் பரிவாரங்களுடன் களம் இறங்கும் கார்த்திக் நரேன் ,நடிப்பவர்கள் யார் யார் என்பதை விரைவில் அறிவிக்கவுள்ளார். அது யாரும் எதிர்பாராத யூகிக்க முடியாத நட்த்திரக் கூட்டணியாக இருக்குமாம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கடத்தப்படும் கிரிஷ்... விஜயா மீது முத்துவுக்கு வந்த டவுட்; கடத்தியது யார்? - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!