யோவ் எலான் மஸ்க்... அப்படியே நரகாசூரன் படத்தையும் வாங்கி ரிலீஸ் பண்ணுயா - இயக்குனர் கார்த்திக் நரேன் நக்கல்

Published : Apr 27, 2022, 02:04 PM IST
யோவ் எலான் மஸ்க்... அப்படியே நரகாசூரன் படத்தையும் வாங்கி ரிலீஸ் பண்ணுயா - இயக்குனர் கார்த்திக் நரேன் நக்கல்

சுருக்கம்

karthick naren : அதர்வா, சரத்குமார், ரகுமான் நடிப்பில் உருவாகும் நிறங்கள் மூன்று என்கிற படத்தை இயக்கி வரும் கார்த்திக் நரேன், சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கிய எலான் மஸ்கிற்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். 

துருவங்கள் பதினாறு படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். வித்தியாசமான கதையம்சத்தோடு முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த இவர், இதையடுத்து நரகாசூரன் படத்தை இயக்குனார். அரவிந்த் சாமி, ஷ்ரேயா சரண், ஆத்மிகா, இந்திரஜித் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படம் 2017-ம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்டது.

இதையடுத்து பைனான்ஸ் பிரச்சனை காரணமாக கிடப்பில் போடப்பட்ட இப்படம் 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னும் ரிலீசாகவில்லை. இதனால் அப்படத்தை ஓரங்கட்டிவிட்டு மாஃபியா படத்தை இயக்கினார் கார்த்திக் நரேன். அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான இப்படம் செம்ம ஸ்டைலிஷாக இருந்ததாக பாரட்டுக்களை பெற்றது. இப்படத்தின் 2-ம் பாகமும் விரைவில் உருவாக உள்ளது.

இதன்பின்னர் மணிரத்னம் இயக்கிய நவரசா என்கிற ஆந்தாலஜியில் அக்னி என்கிற குறும்படத்தை இயக்கினார் கார்த்திக் நரேன். அரவிந்த் சாமி, பிரசன்னா நடிப்பில் உருவாகி இருந்த அந்த குறும்படம் ஹாலிவுட் தரத்தில் இருப்பதாக பாராட்டுக்களை பெற்றன. இவ்வாறு தொடர்ந்து வெற்றிகளை பெற்று வந்த கார்த்திக் நரேனுக்கு சறுக்கலை தந்த படம் தான் மாறன். தனுஷ் நடிப்பில் கடந்த மாதம் ஓடிடி-யில் வெளியான இப்படம் கடும் தோல்வியை சந்தித்தது.

இதையடுத்து அதர்வா, சரத்குமார், ரகுமான் நடிப்பில் உருவாகும் நிறங்கள் மூன்று என்கிற படத்தை இயக்கி வரும் கார்த்திக் நரேன், சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கிய எலான் மஸ்கிற்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். தான் இயக்கிய நரகாசூரன் படத்தை ரிலீஸ் செய்ய உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். 

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது : “யோவ் எலான் மஸ்க், நீ மார்ஸுக்கு செல்லும் முன் நரகாசூரன் படத்தை வாங்கி வெளியிட்டேனா புண்ணியமா போகும்” என குறிப்பிட்டுள்ளார். இயக்குனர் கார்த்திக் நரேனின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... அஜித்தின் தாயார் பாகிஸ்தானை சேர்ந்தவரா?... இந்தியா வந்தது எப்படி? - அஜித்தின் சகோதரர் விளக்கம்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

துரந்தர் படத்தின் 7 நட்சத்திரங்களின் வயது என்ன? படம் ஹிட் கொடுக்குமா?
அகண்டா 2 ரிலீஸ் நிற்க இதுதான் காரணமா? பாலையா அடுத்து என்ன செய்வார்?