திரையுலகில் சோகம்! பட புரோமோஷனுக்கு வந்த 'சகுனி' பட இயக்குனர் சங்கர் தயாள் மாரடைப்பால் மரணம்!

By manimegalai a  |  First Published Dec 19, 2024, 7:56 PM IST

சகுனி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர், சங்கர் தயாள். தற்போது இவர் குழந்தைகள் முன்னேற்ற கழகம் என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தின் புரமோஷனுக்காக வந்த இவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திரை உலகில் அடுத்தடுத்து யாரும் எதிர்பாராத மரணங்கள் நடந்து வருகிறது. இன்று காலை கலகலப்பு உள்ளிட்ட பல படங்களில், காமெடியனாகவும் ஸ்டண்ட் கலைஞருமான கோதண்டராமன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

இவர் மரணம் அடைந்த சோகம் இன்னும் திரையுலகை ரசிகர்கள் மனதை விட்டு நீங்குவதற்கு முன்பே மற்றொரு மரண செய்து வெளியாகி ரசிகர்கள் மற்றும் பிரபலங்களை சோகத்தில் மூழ்கடித்துள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

2012 ஆம் ஆண்டு நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஷங்கர் தயாள். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்தி ஹீரோவாக நடித்திருந்தார். மேலும் கார்த்தி மற்றும் சந்தானம் இடையே இருக்கும் காமெடி காட்சிகள் தற்போது வரை பல ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ப்ரணீதா நடித்திருந்த நிலையில், பிரகாஷ்ராஜ், கோட்டார் ஸ்ரீனிவாச ராவ், ராதிகா, நாசர், கிரண் ரத்தோர், வி எஸ் ராகவன், மனோபாலா, ஆடுகளம் நரேன், சித்ரா லட்சுமணன், மீரா கிருஷ்ணன், உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்த மனசு தங்கம்! கோடிகளில் செலவு செய்து அட்லீ செய்த விஷயம்; பிரபலம் கூறிய ஆச்சர்ய தகவல்!

அனுஷ்கா ஷெட்டி, தேவதர்ஷினி, ஆண்ட்ரியா ஜெர்மினா, சந்திரா மோகன், ஆகியோர் கேமியோ ரோலில் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டாலும், வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்தது. இந்த படத்திற்கு பின்னர் இயக்குனர் சங்கர் தயாள், சுமார் 12 வருடங்கள் கழித்து இயக்கியுள்ள திரைப்படம் தான் 'குழந்தை குழந்தைகள் முன்னேற்ற கழகம்'.  இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக இன்று பத்திரிக்கையாளர்களை சந்திக்க சங்கர் தயாள் வந்திருந்தார். அப்போது திடீரென அசோகர்யத்தை உணர்ந்த அவர், நெஞ்சு வலிப்பதாக கூறியதைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சங்கர் தயாள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மாலை அணிந்து சபரிமலைக்கு சென்ற சசிகுமார்; வைரலாகும் போட்டோஸ்!

சங்கர் தயாள் இயக்கி முடித்துள்ள 'குழந்தைகள் முன்னேற்ற கழகம்' திரைப்படத்தில், நடிகர் செந்தில் மற்றும் யோகி பாபு ஆகியரோர் கதையின் நாயகனாக நடித்துள்ளனர். அரசியல் நையாண்டி காமெடி படமாக இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு கோடி விடுமுறையை குறிவைத்து ரிலீஸ் ஆக இருந்த இந்த படத்தில் ரிலீசுக்கு முன்பே சங்கர் தயாள் உயிரிழந்துள்ளார். 
 

click me!