தியேட்டரில் சக்கைப்போடு போடும் புஷ்பா 2; அதற்குள் ஓடிடிக்கு வருகிறதா? ரிலீஸ் தேதி இதோ

By Ganesh A  |  First Published Dec 19, 2024, 1:59 PM IST

Pushpa 2 OTT Release : அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி 1000 கோடிக்கு மேல் வசூலித்த புஷ்பா 2 தி ரூல் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.


புஷ்பா 2 தி ரூல்

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு ரிலீஸ் ஆன புஷ்பா திரைப்படம், பான் இந்தியா அளவில் ஹிட் அடித்தது. புஷ்பா படத்தின் வெற்றிக்கு பின்னர் பான் இந்தியா ஹீரோவாக உருவெடுத்த அல்லு அர்ஜுன், புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்தார். இப்படத்தை சுகுமார் இயக்க, அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். புஷ்பா 2 திரைப்படம் கடந்த டிசம்பர் 5ந் தேதி திரைக்கு வந்தது.

Tap to resize

Latest Videos

undefined

வசூல் வேட்டை

புஷ்பா 2 திரைப்படத்தில் நடிகை ஸ்ரீலீலா ஒரு பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடி இருந்தார். ரிலீஸ் ஆன முதல் நாளில் இருந்தே சக்கைபோடும் போட்டு வரும் புஷ்பா 2 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை வாரிக்குவித்து வருகிறது. குறிப்பாக முதல் நாளில் மட்டும் இப்படம் 294 கோடி வசூலித்து இந்தியாவிலேயே முதல் நாள் அதிக வசூல் அள்ளிய படம் என்கிற சாதனையையும் படைத்துள்ளது. தற்போது 13 நாட்களைக் கடந்து வெற்றிநடைபோட்டு வருகிறது புஷ்பா 2.

இதையும் படியுங்கள்... சினிமாவின் டிரெண்டையே மாற்றிய கேஜிஎஃப், புஷ்பா படங்கள்: எப்படி, ஏன் ஹீரோக்கள் கடத்தல் வேலை செய்றாங்க?

பாக்ஸ் ஆபிஸ் சாதனை

தெலுங்குக்கு அடுத்தபடியாக இந்தியிலும் புஷ்பா 2 திரைப்படம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்தியில் அதிக வசூல் செய்த படமாக ஜவான் இருந்த நிலையில், அதன் லைஃப் டைம் வசூலை 13 நாட்களில் முறியடித்து பாலிவுட் பாக்ஸ் ஆபிஸையும் பதம் பார்த்து இருக்கிறார் அல்லு அர்ஜுன். புஷ்பா 2 திரைப்படம் தற்போது உலகளவில் ரூ.1500 கோடி வசூலை நெருங்கி வருகிறது. இன்னும் சில தினங்களில் அந்த மைல்கல்லை புஷ்பா 2 எட்டிவிடும்.

புஷ்பா 2 ஓடிடி ரிலீஸ்

இந்த நிலையில், தியேட்டரில் சக்கைப்போடு போட்டு வரும் புஷ்பா 2 திரைப்படம் அதற்குள் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. அதன்படி வருகிற ஜனவரி மாதம் 9-ந் தேதி பொங்கல் பண்டிகையை ஒட்டி புஷ்பா 2 திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளாத்தில் வெளியாக உள்ளதாம். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புஷ்பா 2 படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் சுமார் 275 கோடிக்கு வாங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... புஷ்பா 2 : கூட்ட நெரிசலில் சிக்கிய சிறுவன் மூளைச்சாவு; மீண்டும் கைதாகிறாரா அல்லு அர்ஜூன்?

click me!