கண்ணதாசனின் தத்துவ பாடல்களும்.... காதல் பாடல்களும் ...

 
Published : Oct 18, 2016, 02:02 AM ISTUpdated : Sep 19, 2018, 01:39 AM IST
கண்ணதாசனின் தத்துவ பாடல்களும்.... காதல் பாடல்களும் ...

சுருக்கம்

தத்துவம்...

”ஆசை, கோபம், களவு கொள்பவன்

பேசத் தெரிந்த மிருகம்

அன்பு, நன்றி, கருணை கொண்டவன்

மனித வடிவில் தெய்வம் – இதில்

மிருகம் என்பது கள்ள மனம் – உயர்

தெய்வம் என்பது பிள்ளை மனம் – இந்த

ஆறு கட்டளை அறிந்த மனது

ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்..”

<iframe width='100%' height='400' src='http://www.youtube.com/embed/G97Q6mVk4yc'></iframe>

ஆசை, கோபம், களவு என்ற விலக்க வேண்டிய மூன்று கட்டளைகளையும் அன்பு, நன்றி மற்றும் கருணை என்ற கொள்ள வேண்டிய மூன்று கட்டளைகளையும் அறிந்து அவற்றைப் பின்பற்றும் மனங்களே ஆண்டவன் குடியிருக்கும் இல்லங்கள் என்கிறார் கவியரசு.

 

 

மனித வாழ்வு எவ்வளவு நிலையற்றது, அந்த நிலையற்ற வாழ்வை முழுவதும் உணர்ந்து கொள்ளாமல் ஒருவன் வாழும் குறுகிய காலத்தில் எவ்வளவு பாவச் செயல்களைப் புரிகிறான்? எவ்வளவு உணச்சிக் கொந்தளிப்பில் தகாத செயல்களைப் புரிகிறான்? எவ்வளவு அழகாக் கேட்கிறார் பாருங்கள்…

 

”ஆடிய ஆட்டம் என்ன?

பேசிய வார்த்தை என்ன?

தேடிய செல்வம் என்ன?

திரண்டதோர் சுற்றம் என்ன?

கூடுவிட்டு ஆவி போனால்

கூடவே வருவது என்ன?”

 

யாக்கை நிலையாமை குறித்து மற்றுமொரு பொன்னான தத்துவ வரிகள்.

 

”ஆடும் வரை ஆட்டம்

ஆயிரத்தில் நாட்டம்

கூடி வரும் கூட்டம்

கொள்ளி வரை வருமா?

 

வாழ்க்கையின் முடிவை எளிமையான வார்த்தைகளில், மனதில் பதியும் வண்ணம் அழகாகக் கூறியுள்ளார் பாருங்கள். இதுவே முடிவு என்று அறிந்தும்  மனிதன் போடும் ஆட்டத்திற்கு அளவே இல்லாமல் போகிறதே என்ற வருத்தத்தில் உதிர்ந்த கவி முத்துக்கள் அவை.

 

குடும்பத்தின் மீது வெறுப்புக் கொண்ட நாயகன் பாடுவது போன்ற பாடல் “பழனி” என்ற திரைப்படத்தில் விரக்தி ஆறாய்ப் பெருகி ஓடும் இப்பாடலில்...

 

“பெட்டைக் கோழிக்குக் கட்டுச் சேவலைக்

கட்டி வைத்தவன் யாரடா?

அவை எட்டுக் குஞ்சுகள் பெற்றெடுத்ததும்

சோறு போட்டவன் யாரடா?

சோறு போட்டவன் யாரடா?”

 

என்று கேட்கிறார் கவிஞர். எல்லாம் இயற்கையாய் நடக்கையில் நாம் சாதித்து விட்டது போல நடந்து கொள்ளும் மனித இனத்தின் அறியாமையை எளிமையான உதாரணத்தில் எடுத்துரைப்பதாகக் கொள்ளலாம்.அதனைத் தொடர்ந்து மனித இனத்தின் பல்வேறு துன்பங்களின் முழுமுதற் காரணமாய் கவிஞர் கூறும் விளக்கத்தைப் பாருங்கள்.

 

“வளர்த்த குஞ்சுகள் பிரிந்த போதிலும்

வருந்தவில்லையே தாயடா..

மனித ஜாதியில் துயரம் யாவுமே

மனதினால் வந்த நோயடா….

மனதினால் வந்த நோயடா….

 

மனதைக் கட்டுப்படுத்தும் வித்தை கற்றவர்களுக்கு வாழ்வியல் துன்பங்கள் எதுவும் பெரிதாகத் தெரிவதில்லை என்பதே முற்றும் உணர்ந்த ஞானிகளின் கூற்றாகும். இதனைத் தெளிவாய் எளிமையாய் வழங்கிய கவியரசைத் தத்துவ ஞானி என்றழைப்பதில் பிழையேதும் உள்ளதோ?

 

காதல்

வாழ்க்கைத் தத்துவங்களைச் சொன்ன அதே கவிஞர் வாழ்க்கைச் சக்கரத்தின் அச்சாணியாக விளங்கும் காதலின் மகத்துவத்துவத்தைச் சொல்வதையும் பார்ப்போம்.

”நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்

நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும்

நீ காணும் உலகங்கள் நானாக வேண்டும்”

ஒருவர் மற்றவர் உயிரோடு கலந்து விடும் உன்னத உறவை விளக்கிடும் வரிகள் இவை. காதலர்களுக்கென ’பத்துக் கட்டளைகள்’ வரைந்தால் முதலாவதாக இருக்க வேண்டிய கட்டளை மேலே கூறப்பட்ட வரிகள்.

 

இதே பாடலிலிருந்து தாயுணர்வுக்கு அடுத்தபடியாக  நெருக்கமுடைய காதலுணர்வை சொல்லும் மேலும் இருவரிகள்...

 

”மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும்

நானாக வேண்டும்.

மடிமீது விளையாடும் சேயாக வேண்டும்

நீயாக வேண்டும்.”

 

 இது போன்ற அரிவமும்தான  பாடல்களில் தத்து, காதலும் ததும்பும் வரிகளை கண்ணதாசனை விடத் தெளிவுடனும், எளிமையுடனும் சொன்னவரில்லை, இனியும் இருக்கப் போவதுமில்லை.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி