
பிரபல கன்னட சீரியல் நடிகை ஷோபா பகல்கோட் மாவட்டத்தில் உள்ள, பனஷங்கரி கோவிலுக்கு, குடும்பத்துடன் சென்ற போது ஏற்பட்ட விபத்தில், அவர் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை ஷோபா 'மங்கலு ஜானகி' என்கிற சீரியலில் நடித்து பிரபலமானவர். இவர் இவருடைய குடும்பத்தினர் 8 பேருடன், கோவிலுக்கு சென்றுள்ளனர். இவர்கள் சென்ற கார், கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா அருகே வந்தபோது எதிரே வந்த ட்ரக் மீது மோதியது. இதில் ஐந்து பேர் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்களில் நடிகை ஷோபாவும் ஒருவர்.
மேலும் மூன்று பேர், பலத்த காயங்களுடன் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நடிகை சோபா இறந்ததற்கு, இயக்குனர் சீதாராமன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டு தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார். கோவிலுக்கு சென்ற போது, ஒரு குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிர் இழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.