
எதிர்பார்த்தபடியே.. பிக்பாஸ் ஜோடிக்கு முடிந்தது திருமண நிச்சயதார்த்தம்...!
மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள் நிகழ்ச்சியின்போது காதலித்து பின்னர் தற்போது திருமணம் செய்துகொள்ள உள்ளனர்
தமிழில் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் ஒன்றில் ஓவியா- ஆரவ் இடையே காதல் மலர்ந்தது. பின்னர் பிக் பாஸ் சீசன் 2 மகத்-யாஷிகாவிற்கு இடையே காதல் மலர்ந்தது. அதேபோன்று சீசன் 3 கவின்-லாஸ்லியா இடையே காதல் மலர்ந்தது.
ஆனால் இவர்களின் காதல் திருமணத்தில் முடியவில்லை. ஆனால் கன்னடத்தில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்தாவது சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவரான இசை அமைப்பாளர் சந்தன் ஷெட்டி மற்றும் அதே நிகழ்ச்சியில் பங்குபெற்ற நிவேதா கவுடாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்களுடைய காதல் தற்போது திருமணத்தில் முடிய உள்ளது.
இதற்காக மைசூரில் இருவீட்டார் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நெருங்கிய சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே அழைத்து மைசூரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நிச்சயதார்த்தம் செய்துள்ளனர் இந்த காதல் ஜோடி. இதே போன்று கவின்-லாஸ்லியா காதல் செய்தியும், திருமணம் செய்துகொள்ள வாய்ப்பு உள்ளது என்ற விஷயமும்.. இவர்களும் திருமணம் செய்துக்கொள்வார்களா என்ற எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.